பகாசூரன் விசிகவினருக்கு மட்டும்தான் புடிக்கல மோகன் ஜி பேச்சுக்கு திருமாவின் பதிலடி.

0
321
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பகாசூரன் :

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம் :

இந்நிலையில் இப்படம் அதிகமான எதிர்மறை கருத்துகளை கூறும் படமாக இருக்கிறது எனவும். பெண்கள் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்றும், பெண்களையே அணைத்து சுமைகளையும் சுமக்க வேண்டும் என்று இயக்குனர் மோகன் ஜி இப்படத்தை இயக்கியிருக்கிறார். வெளிநாடு போல சென்னை மக்கள் மாறிவிட்டனர், பிள்ளைகள் ரூமுக்குள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியது தானே போன்ற வசனங்கள் மிகவும் பிற்போக்கு தனமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

-விளம்பரம்-

பகாசூரன் பற்றி திருமா :

இந்த நிலையில் தான் சமீபத்தில் விடுதலை காட்சிகள் ஒருங்கிணைப்பாளர் திருமா இயக்குனர் கீரா இயக்கத்தில் யோகி பாபு, ஜூனியர் எம்.ஜி.ஆர், ஐஸ்வர்யா தத்தா போன்றோர் நடித்துள்ள “இரும்பன்” படத்தை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் “பகாசூரன்” படத்தை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித் விசிக கட்சி தலைவர் திருமா “பகாசூரன்” எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மட்டும் பிடிக்கவில்லை என்று கூறினார்.

மோகன் ஜி யார்? :

மேலும் அதற்கு காரணம் கூறிய திருமா “நாங்கள் யாரும் பகாசூரன் படத்தையே பார்க்கவில்லை. மோகன் ஜி யாரென்றே எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறார் என்றே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். அதனால் இந்த கேள்விக்கு என்னால் பதில் கூற விருப்பமில்லை என்று கூறினார் திருமா. சமீபத்தில் வெளியான “பகாசூரன்” படம் கடுமையான விமர்சங்களை பெற்று வந்தாலும் வசூலை பொறுத்தவரையில் லாபம் தான் என்று கூறப்படுகிறது.

Advertisement