அஜித் சிபாரிசு செய்தும் சிட்டிசன் படத்தில் நடிக்க மறுத்துள்ள நடிகை. ஆனால், பின்னர் ?

0
30707
Citizen

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளி வந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தல அஜித்துடன் படத்தில் நடிக்க பல நடிகர்கள், நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தல அஜித்துடன் வேதாளம் படத்தில் நடிகை சுதா அவர்கள் நடித்திருந்தார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுதா. இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா கதாபாத்திரங்களிலும் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -
Image result for vedhalam sudha

மேலும், 2015 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வேதாளம். இந்த படத்தில் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், அஸ்வின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ரத்தினம் தயாரித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித் உடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை சுதா அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, எனக்கு ரத்தினம் சார் போன் பண்ணி நீங்க சிவா இயக்கத்தில் அஜீத், லட்சுமி மேனன் நடிக்கும் படத்தில் நடிக்கணும் என்று சொன்னார். நானும் சரி என்று சொல்லி சூட்டிங்க்கு போனேன். அங்கு போன பின்பு தான் நான் கண்தெரியாத கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தெரிய வந்தது. நானும் அஜித் உடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட போதும் என்று சரி என்று ஒத்துக்கொண்டேன். ஆனால், அதற்கு முன்னாடியே நான் அவருடன் சிட்டிசன் படத்தில் நடிக்க வேண்டியது.

வீடியோவில் 6 :30 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், நேரம் இல்லாததால் என்னால் நடிக்க முடியாமல் போனது. ஆனால், அஜித் சாரே சொன்னாரு நீங்க தான் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனால், அப்போ எனக்கு கால் ஷீட் இல்லாததால நடிக்க முடியல. அதை அவர் நியாபகத்தில் வைத்திருந்து சூட்டிங் வந்த உடன் எல்லாரையும் தாண்டி ரூமில் உட்கார்ந்து இருந்த என்னை பார்த்து வணக்கம் அம்மா,ரொம்ப சந்தோஷம் உங்களுடன் நடிப்பதில் என்று கூறினார். அவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்து என்னை நேரில் வந்து சந்தித்து பேசினார்.

அவர் அப்படி பேசவேண்டிய அவசியம் இல்லை. அஜித் அவர்கள் எப்போதும் திறமைக்கு மரியாதை கொடுப்பவர். அவரிடமிருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். அஜித்திடம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன் என்று கூறினார். தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.

நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Advertisement