‘இத சாதாரணமா எடை போடாதீங்க’ – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேதிகாவின் ஷாக்கிங் பதிவு.

0
248
vedhika
- Advertisement -

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து நடிகை வேதிகா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் தெலுங்கில் சிவகாசி என்ற மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் முனி, காளை, சக்கரகட்டி,மலை மலை போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். ஒரு காலத்தில் இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர். பிறகு இடையில் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. மீண்டும் இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

வேதிகா நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் பிரபு தேவா தயாரிப்பில் உருவாகி வரும் விநோதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இவர் ஜங்கிள், கானா உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கடந்த சில வருடங்களாகவே ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் உலுக்கி கொண்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேதிகா:

இதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கிறது. இன்னும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை வேதிகா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நடிகை வேதிகா பதிவிட்டிற்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அனைவருக்கும் வணக்கம்! துரதிஸ்டவசமாக நான் முதல் முறையாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன்.

-விளம்பரம்-

வேதிகா பதிவிட்ட பதிவு:

எல்லா மக்களுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் எளிதானதாக இருப்பதில்லை. எனக்கு அதிக காய்ச்சல் இருந்து வருகிறது. இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றது. தயவுசெய்து அறிகுறிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். பயங்கரமான உடல் வலி மற்றும் அதிக காய்ச்சல் நோய் வாய்ப்பட்டு இருப்பது நல்லதல்ல. நீங்கள் ஒருமுறை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மீண்டும் நோய் தொற்று ஏற்படாது என்று நம்ப வேண்டாம். ஓரு மாதமோ அல்லது இரண்டு மாதங்களோ கழித்து நோய்த்தொற்று ஏற்படும்.

கொரோனா தொற்று குறித்து வேதிகா சொன்னது:

அறிகுறிகள் இருக்கிறது என்றால் கவனக்குறைவாக விடாதீர்கள். தயவு செய்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது. உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் யாரையாவது சந்தித்தால் முகமூடி அணியுங்கள். இன்று நான் நன்றாக இருக்கிறேன். நான் விரைவில் நலமாக இருப்பேன். பாதுகாப்பாக இருக்கவும், முக கவசம் அணியுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement