வீர தீர சூரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படம் HR Pictures தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் நேற்று காலை 9 மணி சிறப்பு காட்சியை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நிதி பிரச்சனையின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ்க்கு திடீரென்று தடை விதிக்கப்பட்டது. பின் அந்த பிரச்சனையை ஒரு வழியாக முடித்து மாலை நேற்று மாலை 6 மணிக்கு தான் வீர தீர சூரன் 2 படம் வெளியிடப்பட்டது. லேட்டாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வீர தீர சூரன் 2:
நேற்று இரண்டு ஷோ மட்டும் தான் வீர தீர சூரன் 2 படம் திரையிடப்பட்டது. இருந்தாலுமே ஹவுஸ்புல் காட்சிகளாகத்தான் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் வீர தீர சூரன் 2 படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது., அதாவது தமிழ்நாட்டில் 370 தியேட்டர்கள் வீர தீர சூரன் 2 படத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதில் மொத்தம் 945 காட்சிகள் திரையிடப்பட்டது. இதன் மூலம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்து இருக்கிறது.
வீர தீர சூரன் 2 பட வசூல்:
அதோடு மோகன்லால் நடித்த எம்புரான் படம் தமிழ்நாட்டில் விக்ரம் படத்திற்கு எதிராக நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் 200 திரையரங்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்திற்கு 1269 காட்சிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு கோடியே 94 லட்சம் தான் நேற்று வசூல் ஆகி இருக்கிறது. காலை மற்றும் மதியம் காட்சிக்கு மட்டும் தான் இந்த படம் நல்ல வசூல் செய்தது. வீர தீர சூரன் 2 படம் மாலை திரையிடப்பட்டதும் எம்புரான் படத்தை விட அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.
படத்தின் கதை:
படத்தில் எஸ். ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரவி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையுமே என்கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார். பெரிய தாதாவாக ரவி இருக்கிறார். இவருடைய மகன் தான் கண்ணன். ரவி தன் மகன் கண்ணனை இவரை எப்படியாவது எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விக்ரமிடம் உதவி கேட்கிறார்.
விக்ரமை வைத்து எஸ்.ஜே சூர்யாவை கொன்று விட்டால் தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்று தாதா ரவி நினைக்கிறார். விக்ரமும் இது தெரியாமல் ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? விக்ரம் எதற்காக தாதா ரவி சொன்னதற்கு ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொல்ல நினைக்கிறார்? இவர்களுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.