ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த வீரப்பனின் அண்ணன் திடீர் மரணம் – என்ன காரணம் ?

0
1178
veerappan
- Advertisement -

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் உயிரிழந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரை பற்றி பலர் அறிந்து இருந்தாலும் ஒரு சிலர் அவரை பற்றி மறந்திருக்க கூடும். சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் செய்து வந்தவர் தான் வீரப்பன். தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொலை செய்ய ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் என்று 184 பேரை கொன்றதற்காகவும் தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் வீரப்பனை அரசாங்கம் தேடப்பட்டு இருந்தது. மேலும், 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காகவும் தேடப்பட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் கன்னடத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகரான இராஜ்குமாரை வீரப்பன் 2000 ஆம் ஆண்டு கடத்தி இருந்தார்.

- Advertisement -

வீரப்பன் கொல்லப்பட்டது:

பின் வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமார் அவரது கட்டுப்பாட்டில் 108 நாட்கள் இருந்த நிலையில் 2000 நவம்பர் 15 அன்று வீரப்பனால் விடுவிக்கப்பட்டு இருந்தார். இதனால் பல வருடங்களாக வீரப்பனை கண்டுபிடிக்க தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே வீரப்பன் தனக்கென வைத்திருந்தார்.130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடி வந்த வீரப்பனை 2004 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்கள்.

வீரப்பன் குடும்பம்:

இது தமிழகம் முழுவதும் பெரு வெடியாக வெடித்தது. அரசாங்கம் ஒரு பக்கம் கொண்டாடினாலும் வீரப்பன் கூட்டத்தை சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்து இருந்தார்கள். அதற்கு பின் வீரப்பன் குறித்து பலரும் புத்தகத்தில் படிக்க ஆரம்பித்தார்கள். மேலும், வீரப்பன் குறித்து பல படங்கள் வந்து இருந்தது. இதனிடையே, வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

வீரப்பன் மகன் நடிக்கும் படம்:

அவர் நடிக்கும் படத்துக்கு மாவீரனின் பிள்ளை என்று பெயர் வைத்து இருக்கின்றனர். இப்படத்தை கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார். இப்படத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு இசை ரவிவர்மா, ஒளிப்பதிவு மஞ்சுநாத், படத்தொகுப்பு ஜூலின். ஆனால், இந்த படம் வெளிவந்ததா? என்று தெரியவில்லை.

வீரப்பனின் அண்ணன் மரணம்:

இந்நிலையில் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் இறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கொலை வழக்கில் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த மே 1ஆம் தேதி திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி இன்று வீரப்பனின் அண்ணன் மாதையன் உயிரிழந்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement