கேப்டன் மில்லர் என்னுடைய கதை, அதன் உண்மையான கதை இதுதான் – வேல ராமமூர்த்தி பரபரப்பு புகார்.

0
145
- Advertisement -

கேப்டன் மில்லர் படம் என் கதை தான் என்று வேலராமமூர்த்தி கொடுத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் சிவராஜ்குமார், சுந்திப் கிஷன், பிரியங்கா மோகன் உட்பட பலர் கிஷன், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்தது. படத்தில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றார்கள். இவர்கள் கட்டிய கோயிலுக்குள் இவர்களே போக அனுமதி இல்லாமல் இருக்கும் மன்னர் ஆட்சியில் அடிமைகளாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஆத்திரம் அடைந்த தனுஷ் மரியாதை வேண்டும் என்று பட்டாளத்தில் ஆங்கில படையில் சேர்ந்தார். ஆனால், அங்கு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி தனுஷிற்கு கிடைக்கிறது.

- Advertisement -

இதனால் குற்ற உணர்ச்சியில் தனுஷ் சொந்த ஊர் திரும்புகிறார். ஆனால், அந்த கிராமத்து மக்கள் தனுசை ஊரை விட்டு துரத்துகிறார்கள். இதனால் தனுஷ் புரட்சி கூட்டத்தில் சேர்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்த புரட்சி கூட்டம் சண்டை போடுகிறது. பின் ஆங்கிலேயர்- மன்னர் பகைக்கு இடையே மத்தளம் பாறை மக்கள் திண்டாடுகிறார்கள். யாரால் வெறுத்து ஊரைவிட்டு விரட்டப்பட்டாரோ, அந்த மக்களை காக்கவே தனுஷ் கேப்டன் மில்லனாக மாறுகிறார்.

அவர் என்ன செய்தார்? மக்களை எப்படி காப்பாற்றினார்? ஆங்கிலேயரை வெளியேற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை. படம் முழுக்க சுதந்திரத்துக்கு முன்னால் நடக்கும் கதையை காண்பிக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது தான் என்று நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டிற்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இது தொடர்பாக வேலராமமூர்த்தி, கேப்டன் மில்லர் என்ற படத்தின் கதை என்னுடைய பட்டத்து யானை என்ற நாவலின் பின்னணியை வைத்து உருவாக்கி இருப்பதாக கேள்விப்பட்டேன். என் நாவலின் ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின் அதில் இருந்து வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பார். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை கொஞ்சம் மாற்றி கேப்டன் மில்லர் படமாக எடுத்திருக்கிறார்கள்.

நானும் சினிமாவில் தான் இருக்கிறேன். என்னிடம் அனுமதி கேட்டு அதை எடுத்திருக்கலாம். இதுபோன்ற என் சிறுகதைகள் நாவல்களில் இருந்து நிறைய விஷயங்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள். தமிழ் திரை உலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக இருக்கிறது. ஒரு படைப்பாளியாக இது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு பட குழு தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement