தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். இவருடைய மறைவு செய்திதான் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரையும் பாக்கியராஜ் மறைவு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இவருடைய தனித்துவமான கதையும் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.

முதலில் இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார். இவர் இயக்கிய பல வெற்றி படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும், இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி படங்களையும் இயக்கியும் நடித்திருக்கிறார்.
பாக்கியராஜ் குறித்த தகவல்:
மேலும், நேற்று காலை பாக்கியராஜ் காலமாகி இருக்கும் செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இவர் வாக்கிங் சென்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்திருந்தார். இவரை குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். சில வாரங்களுக்கு முன்பு தான் இவருடைய குருவான பாரதிராஜா காலமாகி இருந்தார். குருவை தொடர்ந்து சிஷ்யன் பாக்கியராஜ் இறந்திருப்பது தமிழ் திரையுலகை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

பாக்கியராஜ் மறைவு:
அந்த வகையில் பாக்கியராஜ் அவர்களின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோயில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இது தொடர்பாக அளித்த பேட்டியில் கிராம மக்கள், இந்த ஊரில் தான் பாக்கியராஜ் பிறந்தார். பக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளியில் தான் சில ஆண்டுகள் படித்தார். சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக அவர் உயர்ந்தார். சினிமா துறையில் உச்சத்தில் இருந்தாலும் தன்னுடைய சொந்த ஊரான வெள்ளாங்கோயிலை அவர் மறந்ததே இல்லை.

கிராம மக்கள் பேட்டி:
எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். கோயில் திருப்பணிகளுக்கும் நிறைய நன்கொடைகளை கொடுத்தார். அதேபோல சுற்றுவட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் மருத்துவம், கல்வி தேவைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார். வெள்ளாங்கோயிலில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சினிமா கனவுகளை சுமந்து சென்ற ஒரு பெரிய ஆளுமையாக உயர்ந்த பாக்யராஜ் அவர்களின் புகழும் நினைவுகளும் என்றென்றைக்கும் பசுமை மாறாமல் எங்களுக்கு கிராமத்தில் நிலைத்து நிற்கும் என்று ரொம்ப எமோஷனாக பேசி இருக்கிறார்கள்.






