“அந்த அம்மாவுக்கு என்ன வேண்டுதல் இருக்க போகுது?” முதல்வரின் மனைவியை விமர்சித்த வேலு பிரபாகரன்.  

0
1396
- Advertisement -

பெரியாரின் ஆதரவு ஆதரவாளரான வேலு பிரபாகரன் முதல்வரையும் அவரது மனைவியும் விமர்சனம் செய்தும் திமுக கட்சியில் உள்ள அனைத்து அனைவரையும் விமர்சித்தும் திக கழகத்தில் உள்ளவர்களை விமர்சித்து பேசியுள்ளார். சமீபத்தில் உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு குறித்து கூறுகையில் பேசிய வேலு பிரபாகரன் பெரியார் எப்போதும் அரசியல்வாதிகளை நம்ப மாட்டார். அரசியல்வாதிகள் ஓட்டு பொறுக்கிகள் என்றும் பெரியார் கூறுவார் என்று வேலு பிரபாகரன் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அவர் கூறியது:

அவர் ஆரம்ப காலகட்டங்களில் திமுக எதிர்த்து வந்தார். நான் திராவிட கழகம் என்று வைத்துள்ளேன் ஆனால் நீங்கள் அதற்கு மாற்றாக திராவிட முன்னேற்றக் கழகம் என்று வைத்துள்ளீர்கள் அப்போது ஆனால்  திராவிடத்தை பின்னேற்ற வைத்து இருகிறேனா?  அரசியல் கட்சியின் இருப்பவர்கள் பொறுக்கிகள் அப்பொழுது அவர் அண்ணாவையும் சேர்த்து தான் பெரியார் கூறினார் என்று வேலு பிரபாகரன் கூறினார். அவர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.

- Advertisement -

மேலும் பெரியார் அரசியல்வாதிகளை முழுக்க முழுக்க நிராகரித்து வந்தார். பெரியார் இறந்து கிட்டத்தட்ட 50  வருடங்கள் ஆகிறது. இந்த 50 வருடங்களில் அதை ஒழித்து இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் இவர்களுக்கு எப்பொழுது எல்லாம் பிரச்சனை வருகிறது அப்போதெல்லாம் அதை பற்றி பேசி வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி பேசியதும் அந்த வகையில் தான் சேரும் என்றும் வேலு பிரபாகரன் கூறினார்.

முதல்வரின் மனைவியை விமர்சித்த கூறியது:

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற தமிழச்சி தங்கபாண்டியன் முதலில் இருந்து பெண்களை பாருங்கள் அவருக்கு எந்த ஒரு வெட்கமும் கிடையாது. நெற்றியில் குங்குமத்தை வைத்து கொண்டு தலையில் ஒரு கூடை பூ வைத்துக்கொண்டு அதன்பின் வந்து பெரியார் பெரியார் என்று சொன்னால் எல்லாம் சரியாகிவிடுமா.? உதயநிதி ஸ்டாலினுடைய தாயார் துர்கா ஸ்டாலின் அவர்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் நடத்தி வருகிறார். உதயநிதி அம்மாவிற்கு என்ன வேண்டுதல்.

-விளம்பரம்-

தமிழகத்தில் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள். உங்களுடைய புருஷன், மாமனார் மற்றும் மகன் ஆட்சியில் ஒரு உயர்ந்த பொறுப்பில் தான் இருந்து வருகிறார்கள். எல்லாம் தான் இருக்கிறது மேலும் கடவுளிடம் சென்று என்னை கெஞ்சி போகிறாய் உங்களுடைய புருஷனை  பிரதமராகவும் உங்களுடைய மகனை முதல்வராகவும் ஆக்க வேண்டும் என்று வேண்டி வேண்டுகிறீர்களா இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். திகவில் இருக்கும் ஒருத்தராவது யோக்கியமானவர்களாக இருக்கிறார்களா யாராவது ஒருத்தராவது பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைக்கிறார்களா.

இதில் உள்ள அயோக்கியர்கள் எல்லாம் பெரியார் பெண் விடுதலைகாக  பாடுபட்டார் என்றும் கூறுகின்ற நிலையில் அதில் உள்ள ஒருத்தன் உங்களுடைய மனைவியாவது ஆண்களைப் போல முடி வெட்டிக் கொண்டிருக்கிறார்களா? மற்றும் நகை அலங்காரங்களை இல்லாமலும் வளையல் இல்லாமலும் இருந்து இருக்கிறார்களா. திக கழகத்தின் தலைவர் கி.வீரமணி மனைவியை பாருங்கள் அந்த அம்மா சின்ன சின்னதாக கழுத்தில் நகைகளையும் தலையில் ஜடையையும் போட்டுக் கொண்டிருப்பார்.

பெரியார் இயக்கதில் உள்ள அயோக்கியர்கள் எல்லாம் மேடையில் பேசுவார்கள் என்னவென்று பேசுவார்கள் பார்த்தால் பெண் அடிமை ஒழிக்க பெரியார் பாடுபட்டார் என்று பேசுவார்கள். அதில் உள்ள ஒவ்வொருவரின் மனைவியையும் பாருங்கள் குறைந்த பட்சம் 50 சவர நகைகளை அணிந்து இருப்பார்கள். இவர்களெல்லாம் என்ன பெரியவர் இயக்க தலைவர்கள் என்று திகவையும் திமுகவையும் விமர்சித்த பேசினார் வேலு பிரபாகரன்.

Advertisement