அதே கிராமத்து ஹீரோ, அதே பாம்பே – வெந்து தணிந்தது காடு 23 ஆண்டுக்கு முன் வந்த இந்த விஜய் படத்தின் காப்பியா ? வீடியோவ பாருங்க.

0
458
vendhu
- Advertisement -

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் விஜய் படத்தின் காப்பி என்ற புதிய சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

வெந்து தணிந்தது காடு படம்:

இவர் வயகாட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் வயகாட்டில் வேலை செய்யும் போது சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார். பின் உறவினர் மூலம் சிம்புவை வேறு ஒரு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் உறவினரும் தற்கொலை செய்து கொள்கிறார். பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார்.

படத்தின் கதை:

அங்கு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் சிம்புவின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தின் விமர்சனம்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இருந்தாலும், இந்த படம் விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தின் காப்பியாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். தளபதி விஜய் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளிவந்திருந்த படம் நெஞ்சினிலே.

விஜய் படத்தின் கதை:

இந்த படத்தில் விஜய், இஷா கோப்பிகர், மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் விஜய் அவர்கள் குடும்ப சூழ்நிலைக்காக மும்பைக்கு வேலைக்கு செல்வார். பின் அங்கு ஒரு ரவுடி கும்பலிடம் அடியாளாக வேலைக்கு செய்து பணத்தை அனுப்பி வைப்பார். அதேபோலத்தான் தற்போது வெந்து தணிந்தது காடு படத்திலும் சிம்பு குடும்ப சூழ்நிலை காரண மும்பைக்கு செல்கிறார். இதனால் நெட்டிசன்கள் பலரும் நெஞ்சினிலே படத்தின் காப்பியாகவே இருக்கிறது என்றும் புதுப்பேட்டை, நாயகன் போன்ற படங்களின் சாயலும் இருப்பதாகவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement