மங்காத்தா- கோட் படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து, இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்து இருக்கிறார்.
கோட் படம்:
மேலும், இவர்களுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். இதுவரை இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து விஜயின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியிருந்தது. இந்தப் பாடலை விஜய் பாடியிருக்கிறார்.
கோட் பாடல்கள்:
அது மட்டும் இல்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து கோட் படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. ஆனால், இப்பாடல் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், சமீபத்தில் தான் கோட் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே நண்பா, நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி உள்ளார்கள்.
வெங்கட் பிரபு பேட்டி:
மொத்தத்தில் பார்க்கும்போது கோட் ஒரு நல்ல ஆக்சன் பிளாக் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இருக்கும் என தெரிகிறது. அதோடு ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு கோட் படத்தின் ட்ரைலரை பார்த்து அஜித் பாராட்டி இருந்ததாக வெங்கட் பிரபு சொல்லி இருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் விஜய்யின் கோட் -அஜித்தின் மங்காத்தா படத்தை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு, கோட் படம் மங்காத்தா மாதிரியான ஒரு படமாகத்தான் இருக்கும். ஆனால், மங்காத்தா படத்தில் எமோஷன் இருக்காது.
மங்காத்தா – கோட்:
கோட் படத்தில் ஏமோஷன் இருக்கும். கோட் எந்த மாதிரியான படம் என்று ட்ரைலரில் சொல்லியிருக்கிறோம். ஆனால், அதை சரியாக டீகோட் செய்யவில்லை. இந்த படம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியம், எளிதில் கண்டுபிடிக்க முடியாத டீவ்ட்ஸ்கள் வைத்திருக்கிறோம். மங்காத்தா படம் போல இந்த படமும் வேகமாக தான் போகும். காந்தி என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை காட்டும் படமாக கோட் இருக்கிறது என்று கூறியிருந்தார்.