அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “மங்காத்தா” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படம் வெளியாகி நேற்றோடு 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.
Athallam seri, unga multistarrer project – Vijay & Ajith eppo? ?
— Sammy (@iamsampoline) November 12, 2018
இந்த படத்தில் அஜித் ஒரு வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நடிகர் அஜித்திற்க்கு “மங்காத்தா” படம் ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவே அமைந்தது என்றே கூறலாம்.
அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற ஹீரோகளின் ரசிகர்கள் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகளை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் விஜய் அஜித் வைத்து எப்போ படம் எடுக்க போறீங்க என்று கேட்டுள்ளார்.
Hehehehe ippo avanga othukanum!! 7/8 years back they agreed!! Ippo?!?
— venkat prabhu (@vp_offl) November 12, 2018
அதற்கு பதில் அளித்திருந்த வெங்கட் பிரபு, இப்போ அவங்க ஒத்தகனும், 7,8 வருசத்துக்கு முன்னாடினா ஓத்துட்டு இருப்பாங்க ஆனா இப்போ? என்று பதிவிட்டுள்ளார். அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் வெளியாகி 7 வருடங்கள் ஆகின்ற. ஒரு வேலை இந்த படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக விஜயை தான் வெங்கட் பிரபு மனதில் வைத்திருந்தாரோ என்று எண்ணம் தோன்றுகிறது.