தனது முன்னாள் உதவி இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு வெங்கட் பிரபு சொன்ன அட்வைஸ்

0
152
- Advertisement -

பா.ரஞ்சித்துக்கு இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கும் அட்வைஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ பட படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

-விளம்பரம்-

லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது

- Advertisement -

கோட் படம்:

இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக படக்குழு படத்திற்கான பிரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முதல் நாள் கட்சி தமிழ்நாட்டில் காலை 9:00 மணி தொடங்க இருப்பதாகவும், கேரளா மற்றும் ஆந்திராவில் அதிகாலை 4:00 மணி காட்சி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட் பிரபு பேட்டி:

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் விழாவில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி, சினேகா, லைலா, பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதை அடுத்து கோட் படத்தில் நடித்திருக்கும் பிரபலங்கள் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தும், படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கூறியும் வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு, என்னிடம் உதவி இயக்குனராக பா. ரஞ்சித் வேலை செய்திருந்தார்.

-விளம்பரம்-

ரஞ்சித் குறித்து சொன்னது:

அவருடைய இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர் கமர்சியல் படங்களை எடுக்கணும். அவருக்குள் கமெர்ஷியல் இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அதோடு அவருடைய படங்கள் பேசும் அரசியல் எனக்கு புரியவே இல்லை. எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அவர் கமர்சியல் படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் கூட ஒரு காட்சியில் பா. ரஞ்சித் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட் படம் குறித்த தகவல்:

மேலும், இந்த கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இந்த கோட் படத்தில் இருந்து 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement