கோவா படத்துல இதே மாதிரி ரோல்ல அவர் நடிச்சப்ப ச்ச்சீனு சொன்னாங்க. இப்போ இதுக்கு விருது. வெங்கட் பிரபு வேதனை.

0
4247
goa
- Advertisement -

கொரனோ காலகட்டத்தில் இருந்து பல உச்ச நட்சத்திரத்தின் படங்கள் கூட OTT தளத்தில் தான் வெளியிடப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தற்போது பல்வேறு நடிகர் நடிகைகளும் வெப் சீரிஸ் தொடர்களில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்தது.

-விளம்பரம்-

நெட்ஃப்ளிஸ் நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக வெளியிட்டு இருந்தார்கள். மேலும், இந்த பாவக் கதையில் தங்கம், ஓர் இரவு, லவ் பண்ண விட்டுடனும், வான் மகள் என்று நான்கு கதை வெளியாகி இருந்தது. பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல இந்தப் படங்கள் முடிகின்றன. இந்த தங்கம் கதையில் சாந்தனு, காளிதாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : மகனுக்கு ‘ஞானஸ்நானம்’ செய்து இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் மியா வீட்டில் நேர்ந்த இழப்பு.

- Advertisement -

காளிதாஸ் அவர்கள் இதில் ஓரின சேர்க்கை அதாவது திருநங்கை கதாபாத்திரமாக நடித்திருப்பார். தங்கம் தொடரில் சத்தாருவாக நடிகர் காளிதாஸ் நடித்திருப்பார். இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிகர் காளிதாசன் அவர்களுக்கு தங்கம் கதையில் நடித்ததற்க்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை SIMMA 2020 வழங்கி இருந்தார்கள். இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பது, நான் இயக்கிய கோவா படத்திலும் சம்பத் அவர்கள் இதே மாதிரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அவரின் நடிப்பு குறித்து யாரும் பாராட்டவில்லை. அதற்கான அங்கீகாரமும் அவருக்கு கிடைக்கவில்லை. அப்போதுஅவரது கதாபாத்திரத்திற்கு ச்சீ என்று தான் விமர்சனங்கள் வந்தது.

-விளம்பரம்-

சோகமான உண்மை அதான். ஆனால், தற்போது அதே கதாபாத்திரத்தில் தான் காளிதாசன் நடித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு அவார்டு கிடைத்து இருக்கிறது. ஓகே! வாழ்த்துக்கள் காளிதாஸ் என்று பதிவிட்டிருந்தார். தற்போது வெங்கட் பிரபுவின் இந்த டிவிட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement