மகனுக்கு ‘ஞானஸ்நானம்’ செய்து இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் மியா வீட்டில் நேர்ந்த இழப்பு.

0
1608
miya

தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் இருப்பவர் நடிகை மியா ஜார்ஜ். நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் 2010ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தில் நடித்தார்.

ஆரம்பகாலத்தில் ஜிமி ஜார்ஜ் என்ற தனது சொந்த பெயரை திரைப்படத்திற்காக மியா என்று மாற்றிக் கொண்டார். தமிழில் அமரகாவியம் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, சசிகுமார் நடித்த வெற்றிவேல், ரம், எமன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மியா. மேலும், இவர் மலையாளத்தில் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : கணவர் இறந்து ஓராண்டு ஆன பிக் பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்யப்போகிறாரா நடிகை மேக்னா ராஜ்?

- Advertisement -

நடிகை மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் கடந்தஆண்டு மே 30 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூன் மாதம் தனக்கு குழந்தை பிறந்து இருப்பதை திடீரென்று அறிவித்து இருந்தார் மியா.

Malayalam actress Miya George's father George Joseph passes away | PINKVILLA

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை மியா, தன் மகனுக்கு Baptism ‘ஞானஸ்நானம்’ துவங்குவதாக புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதில் இவரது குடும்பத்தினர் மட்டும் பங்குபெற்றனர். மகனுக்கு இப்படி ஒரு விஷேசம் நடைபெற்று இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் மியாவின் தந்தை திடீரென்று காலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement