இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்துங்கள், பிரேம்ஜி திருமணம் குறித்து- வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை

0
464
- Advertisement -

பிரேம்ஜியின் திருமணத்திற்காக வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட்பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். ஆரம்பத்தில் இவர் படங்களை இயக்கும் இயக்குனராக தான் சினிமாவில் நுழைந்தார். அதன் பின் இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி மற்றும் ஜோம்பி ஆகிய படத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த பார்ட்டி படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் குறித்து எப்போது? ஏன் நடக்கவில்லை? உண்மையாலே இவருக்கு திருமணம் ஆகுமா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் பிரேம்ஜிக்கு திருமணமாக இருக்கிறது. இவர் இந்து என்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இவர் சேலத்தை சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

- Advertisement -

பிரேம்ஜி திருமணம் குறித்த தகவல்:

மேலும், இவர்களுடைய திருமணம் திருத்தணியில் உள்ள முருகன் கோவில் தான் நடைபெற இருக்கிறது.
இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். பல ஆண்டு காலமாக பேச்சுலர் ஆக இருந்த பிரேம்ஜி கூடிய விரைவில் திருமண வாழ்க்கைக்குள் செல்ல இருப்பதால் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது பிரேம்ஜியின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தான் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

வெங்கட் பிரபு அறிக்கை:

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகரும், இயக்குனரும், பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது.

-விளம்பரம்-

திருமணம் குறித்து சொன்னது:

“பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட, “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில் வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்.

மணமகள் குறித்து சொன்னது:

எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து, இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம். அதோடு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தின் அடுத்த அப்டேட் கூடிய விரைவில் வெளிவரும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement