கோட் திரைப்படத்தை குறித்து வெங்கட் பிரபு சொன்ன சுவாரசியமான தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில், சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள்.
மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகள் இடையே வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கோட் படம்:
கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களமிறங்குகிறது. அதில் விஜய், பிரசாந்த், அஜய், பிரபுதேவா ஆகியோர் ஆயுதங்களுடன் களமிறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே, தாய்லாந்துக்கு தனது மனைவி, சினேகாவுடன் விஜய் செல்கிறார். அங்கு, விஜய் தனது மகனை பறிகொடுப்பதாக காட்டப்படுகிறது.
கோட் கதை:
ஆனால் கடைசியில், தனது மகனை விஜய் ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? விஜய்க்கு வில்லனாக அவரது மகன் மாறியது எப்படி? என்பதுதான் படத்தின் மீதி கதை. நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றிய விஜய், இந்த படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என அனைத்திலும் தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசென்ஸ் அனைவருக்கும் ஒரு கூஸ்பம்ஸாக இருக்கிறது. கடந்த 5ஆம் தேதி வெளியான இப்படம் உலக அளவில் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்:
இப்படத்தில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் பேசும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில், அது எவ்வளவு பெரிய விஷயம். சிவகார்த்திகேயன் ஒரு பேன் பாய். சிவாக்கு விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் விஜய் சார் கிட்ட,’இதை வச்சுக்கோங்க சிவா, யாராவது வந்தா சுட்டுடாதீங்க’ என்பது போல் தான் டயலாக் சொன்னேன். ஆனால், விஜய் சாரே தான், துப்பாக்கியை படிங்க சிவா, இனி எல்லாமே உன் கையில் தான் இருக்கு’ என்பது போல சொல்லிட்டாரு. அது படத்துக்கு சம்பந்தமாக இருக்கும், எல்லாத்துக்குமே சம்பந்தமாகவும் இருக்கும்.
"Thuppaki a pudinga Shiva" line was said by Vijay sir by himself out of script ~ VP
— SK (@bsk5496) September 7, 2024
Idhuku mela direct a silara seruppala adikka mudiyadhu nandri @vp_offl
pic.twitter.com/vWvirLwtZ4
வெங்கட் பிரபு சொன்னது:
அதற்குப் பிறகு சிவா, நீங்க இதை விட பெரிய வேலையா போறீங்க, நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன், அதை நீங்க பாருங்க’என்று சொல்வார். அப்போ விஜய் சார் தம்சப் காமிச்சிட்டு போவார். இது கண்டிப்பாக விஜய் சாரோட பெருந்தன்மையை குறிக்குது என்று தான் சொன்னேன். எனக்கு விஜய் சார் சினிமா விட்டு போறாரே என்று ஒரு பக்கம் கஷ்டமாக இருக்கு. விஜய் சார், போனதுக்கு அப்புறம், சிவகார்த்திகேயன் சாருக்கும் மோகன் சாருக்கும் இடையே ஒரு சீன் இருக்கு. அது ஒரு நல்ல சீன்,படத்தில் நீளத்தால் அதை பயன்படுத்த முடியவில்லை. கண்டிப்பாக அது டெலிட்டட் சீனில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.