மாநாடு திரைப்படம் டெனட் படத்தின் காபியா – கேலி செய்தவர்களுக்கு தனது நக்கலில் பதில் அளித்த வெங்கட் பிரபு.

0
1349
maanadu
- Advertisement -

மாநாடு படத்தை ‘டெனெட்’ படத்தோடு ஒப்பிட்டவர்களுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார். தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது.இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா, டேனியல் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். கடந்த நவம்பர் 21 காலை 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

- Advertisement -

அதில் நெத்தியில் புல்லட்டுடன், தலையில் ரத்த காயங்களுடன், மங்காத்தா அஜித் போல ஒரு செயின் மற்றும் டாலர் என்று நமாஸ் செய்து கொண்டு இருப்பது போல அந்த பாஸ்டரரில் சிம்பு கழுத்தில் ஒரு செயின் இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை 7 மொழிகளில் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த டீசரை ஹாலிவுட் படமான ‘டெனெட்’ படத்தின் காப்பி என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ள வெங்கட் பிரபு மாநாடு’ படத்தின் டீஸரை ‘டெனெட்’ படத்தோடு சிலர் ஒப்பிடுவது எங்களுக்குக் கவுரவம் தான். எனினும் துரதிர்ஷ்டவசமாக இதற்கும் அதற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ‘டெனெட்’ படம் புரியவே இல்லை. ட்ரெய்லருக்குக் காத்திருங்கள். அப்போது நீங்கள் அதை வேறொரு படத்துடன் ஒப்பிடலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement