‘அவர பத்தி பேச வச்சிட்டாரு’ – மாநாடு படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு வெங்கட் பிரபு கொடுத்த செம பதிலடி.

0
901
maanaadu
- Advertisement -

மாநாடு படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் கடந்த 25 ஆம் தேதி வெளியாகி இருந்தது இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஒரு நாள் மீண்டும் மீண்டும் நடப்பது தான் டைம் லூப்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளிவந்த ஜாங்கோ திரைப்படமும் டைம் லூப் கான்செப்ட் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ரிவியூ கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, படத்தில் நடக்கிற மாநாட்டில் முதலமைச்சரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று சிம்புவிடம் சொல்கிறார்கள்.

இதையும் பாருங்க : மாரி செல்வராஜ் படத்தில் கமிட் ஆன வடிவேலு – ஹீரோ யார் தெரியுமா ? இதோ விவரம்.

- Advertisement -

முதலமைச்சரை சுட்டுக்கொண்டால் மதக் கலவரம் ஆகும் என்று சிம்புவுக்கு புரிகிறது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று சிம்பு தவிக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. ஆனால், கதையில் சரக்கு இல்லை. காரணம், முதலமைச்சரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் பார்க்கும் ரசிகர்களுக்கு தோன்றவில்லை. ஏனென்றால், முதலமைச்சர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை காண்பிக்கவில்லை.

முதலமைச்சர் உடைய பின்னணி அவரைப்பற்றி எதுவும் சொல்லாததால் இவர் செத்தாலும் பரவாயில்லை என்று படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். மொத்தத்தில் இந்த படம் ஒரு சிக்கல் பிடித்த கதை. ஓரளவு புரிவதற்கு காரணம் எடிட்டிங் தான் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெங்கட் பிரபு இதுகுறித்து விளக்கமளிக்கையில் ‘எனக்கு தெரிந்து அவர் கதையே பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

-விளம்பரம்-

அப்துல் காலிக்கிற்கு, முதலமைச்சரை கொள்வது பிரச்சனை இல்லை. ஆனால், அது ஒரு மாநாட்டில் நடந்தால் தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது பழி போட்டு கலவரம் நடக்கும். அது நடக்கக்கூடாது என்பது தான் அவரின் நோக்கம். ஆனால், அது அவருக்கு புரியவில்லை. உண்மையில் இவர் படம் பார்த்தாரா இல்லை வேறு யாராவது பாத்துட்டு வந்து இவருக்கு கத சொன்னாங்களானு தெரியல என்று கூறியுள்ளார்.

Advertisement