அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில் மாபெரும் ஹிட் படங்களின் வரிசையில் ‘மங்காத்தா’ படத்திற்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ஆம் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படத்தில் அஜித் வித்யாசமான ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்து விடாதா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இந்த படம் மீண்டும் திரைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கிறாரகள். இந்த நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி மங்காத்தா திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒளிபரப்பான இந்த திரைப்படத்தை பலரும் கண்டு களித்து ரசித்தார்கள். மேலும் மங்காத்தா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது.
இதையும் பாருங்க : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பயணம். தனி வீட்டில் அடைக்கப்பட்ட தீனா ஆதிகேசவன் மகன்.
மங்காத்தா படத்தில் இடம்பெற்ற ஆடாம ஜெயிச்சோமடா என்ற பாடல் படு ஹிட் அடித்தது. மேலும். அந்த பாடலின் ஆரம்பத்தில், பிரேம்ஜி, சரோஜா சாமான் நிக்காலோ என்று ஆரம்பிப்பார். மங்காத்தா படத்திற்கு முன்பாக வெங்கட் பிரபு ‘சரோஜா ‘ என்று படம் எடுத்திருந்தார். அதனால் தான் சரோஜா என்ற பெயரை பயன்படுத்தினார் என்று தான் பலரும் இது நாள் வரை நினைத்திருந்தோம்.
ஆனால், சரோஜா சாமான் நிக்காலோ என்ற வரிகளுக்கும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்திற்கு ஒரு சம்மந்தம் இருக்கிறது. நேற்று பிரபல தொலைக்காட்சியில் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருந்த முதல்வன் படத்தை ஒளிபரப்பு இருந்தார்கள் இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் அர்ஜுன் ஏழைகளுக்கு அரசாங்கம் கொடுத்த வீடுகளில் வேறு சிலர் வாடகைக்கு தங்கி இருப்பதை கண்டு அவர்களை காலிசெய்ய செய்வார்.
அப்போது வீட்டில் தங்கி இருக்கும் ஒருவர் சுஷ்மா சாமான் நிக்காலோ என்று ஹிந்தியில் குறிப்பிடுவார். இந்த காட்சியின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து குறிப்பிட்டுள்ள பிரேம்ஜி ,அது சுஷ்மா சாமான் நிக்காலோ. சரோஜா சாமான் நிக்காலோ கிடையாது என்று ட்வீட் செய்திருக்கிறார். பிரேம்ஜியின் இந்த வீட்டிற்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு சரி, சுஷ்மா எனக்கு சரோஜானு அப்போ கேட்டுச்சு இப்போ என்ன பண்றது. ஆனால், விதை ஷங்கர் போட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.