கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பயணம். தனி வீட்டில் அடைக்கப்பட்ட தீனா ஆதிகேசவன் மகன்.

0
1669
- Advertisement -

உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் தொற்று மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இதிலிருந்து நிரந்தரமாக விடுதலை எப்போ கிடைக்கும் என்றே தெரியவில்லை. உலகிற்கே ஒரு சவாலாக இந்த கொரோனா வைரஸ் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 1397 பேர் பாதிக்கப்பட்டும், 34 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Malayalam News - 'പലരും മനഃപൂര്‍വം ...

- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாம் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் நடிகர் சுரேஷ் அவர்கள் தன் மகனை வீட்டிலேயே தனிமைபடுத்தி உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ், மலையாளம் சினிமா படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி. இவர் லண்டனிலிருந்து வந்த தன் மகனை குடும்ப மருத்துவரின் அறிவுறுத்தலின் படி தனியாக பிளாட் எடுத்து தங்க வைத்து உள்ளார். ஏனெனில், சுரேஷ் கோபி அவருடைய மகன் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் போது விமானத்தில் ஒருவருக்கு ஒருவர் கொரோனா தொற்று இருந்து உள்ளது.

ஆகையால் சுரேஷ் கோபி தன் மகனுக்கு கொரோனா சோதனை செய்து உள்ளார். சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருந்தாலும் அவர் அரசின் அறிவுறுத்தலை கருத்தில் கொண்டு அவருடைய மகனை தனிமைப்படுத்தி வைக்க முடிவெடுத்து உள்ளாராம். மேலும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதும் கடைகள்,பொது இடங்கள், போக்குவரத்துகள், சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தலை தூக்கி உள்ளது. இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள்.

மலையாள மொழியில் பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் சரத்குமாருடன் சமஸ்தானம், அஜித்துடன் தீனா, விக்ரமுடன் ஐ போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பின்னணி பாடகர் ஆவார்.

Advertisement