கோட் படம் குறித்து அஜித் சொன்னதாக வெங்கட் பிரபு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.
பின் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள். உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
கோட் படம்:
கோட் படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை சேர்ந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோட் படம் தொடர்பாக அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு, விஜய் சாரிடம் நான் இரண்டு விதமான கிளைமாக்ஸை சொல்லியிருந்தேன். ஆனால், அவருக்கு சிஎஸ்கே மேட்ச்சின் போது நடக்கும் கிளாஸ் மேக்ஸ் தான் பிடித்திருந்தது. பொதுவாகவே ஒரு விளையாட்டு போட்டியில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்பதை வைத்து மட்டுமே ஒரு முழு படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு பேட்டி:
விளையாட்டு போட்டியின் பைனல் ஸ்கோரை வைத்து மட்டும் படம் வந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு விதமான இன்ஸ்பிரேஷன் என்றாலுமே நம்முடைய ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி என்னுடைய பாணியில் ஒரு படத்தை எடுக்க எப்படி வடிவமைத்தேன் என்பதுதான் முக்கியம். கிளைமாக்ஸில் தோனியும் விஜய் சாரையும் ஒரே பிரேமில் ஒன்றாக காட்ட வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக, தோனிக்கு விஜய் சார், ஆல் தி பெஸ்ட் பார் தி ஃபைனல்ஸ் என்று வாழ்த்து சொல்லி போவது போல யோசித்து வைத்திருந்தேன்.
படம் குறித்து சொன்னது:
இருந்தாலும், தோனியை எங்களால் வர வைக்க முடியவில்லை. அதேபோல் கோட் படம் பார்த்து தல எனக்கு போன் பண்ணி, படம் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. வாழ்த்துக்கள் என்று சொன்னார். அவங்க ரெண்டு பேருமே எப்போதுமே நண்பர்களாக தான் இருக்கிறார்கள். ட்ரெய்லரை பார்த்துட்டு கூட அஜித் சார் எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தார். அதை நான் விஜய் சாருக்கு அனுப்பி இருந்தேன். விஜய் சார் பண்ண ரிப்ளையும் அஜித் சாருக்கு ஃபார்வேர்ட் பண்ணி இருந்தேன்.
அஜித் குறித்து சொன்னது:
மேலும், ஏன்டா எங்க கிட்ட தான் நம்பர் இருக்கு. நாங்க பேசிக்க மாட்டோமா? என்று என்னை கலாய்ப்பார்கள். அந்த அளவிற்கு ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். படம் மொத்தமாகவே 3 மணி 40 நிமிடத்திற்கு மேல் இருந்தது. நிறைய காட்சிகளை கட் பண்ணி 3 மணி நேரத்தை எடுத்து வெளியிட்டோம். ஓடிடியில் வெளியாகும் போது கட் பண்ணாமல் முழு படத்தையும் வெளியிட முயற்சி செய்வோம் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.