சிம்புவின் படம் வெளியாக சிவகார்த்திகேயன் உதவி செய்தாரா? இது குறித்து இயக்குனர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. படம் எடுக்க தொடங்கியதிலிருந்து ரிலீசாகும் வரை பல பிரச்சினைகள், போராட்டங்களை சந்தித்து தான் மாநாடு படம் வெளிவந்தது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி இருக்கிறார். சிம்பு இந்த படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். டைம் லூப் என்ற கான்செப்ட்டை வைத்து இந்தப் படம் வெளியாகிறது.
மேலும், இந்த படத்தில் சிம்புவுடன் எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் சிம்புவிற்கு அடுத்ததாக எஸ் ஜே சூர்யா கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் சிம்புவின் மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே படம் ரிலீஸ் ஆவதற்கு முன் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் என்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளிவந்தது அனைவருக்குமே தெரியும்.
மாநாடு படம் ரிலீஸ் ஆவதற்கு முன் மாநாடு படத்திற்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்து இருந்தார்கள். இதனால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகும் என்று சுரேஷ் காமாட்சி ட்விட் போட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியாக இருந்தது. பின் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சிம்புவும், இயக்குனரும் போராடி இருந்தார்கள். உடனே உதயநிதி, சோனி நிறுவன மதுரை அன்பு செழியன், ஐசரி கணேஷ் போன்று சினிமா தரப்பிலிருந்து பலரும் உதவி செய்து திட்டமிட்டபடியே மாநாடு படத்தை வெளியிட்டு இருந்தார்கள்.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் மாநாடு படம் ரிலீஸ் ஆவதற்கு முன் நள்ளிரவில் நடந்தது குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, 24ஆம் தேதி நள்ளிரவில் படம் ரிலீஸாவதற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டது. எல்லாத்தையும் தாண்டி ஒருத்தருக்கு ஒரு பிரச்சினை என்றால் எல்லோருமே வந்து சேர்ந்துவிட்டார்கள். மொத்த தமிழ் சினிமா துறையும் அங்கு இருந்தார்கள். எல்லோருமே மாநாடு படம் வெளியாகனும் என்று உறுதியாக இருந்தார்கள். சொல்லப்போனால் சிவகார்த்திகேயனும் நைட் 3 மணிக்கு கால் பண்ணி என்ன பண்ணனும் என்று கேட்டார். அந்த அளவிற்கு எல்லோரும் மாநாடு படம் வருவதில் ஆர்வமாக இருந்தார்கள்.
அதுதான் உண்மையான லவ். வெளியிலிருந்து பார்க்கும்போது அவருக்கு எதிர் இவர் என்று எல்லாம் சொல்வார்கள். ஆனால், அதெல்லாம் கிடையாது. எல்லோரும் அவர்கள் படம் நன்றாக இருக்க வேண்டும் என்ற போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. அதற்கு உதாரணமாக அதை நான் கண்கூட 24ஆம் தேதி நைட் பார்த்துவிட்டேன். நிறைய நபர்களின் பெயரை சொல்லலாமா? வேணாமா? கூட எனக்கு தெரியவில்லை. அவ்வளவு பேரும் மாநாடு படம் வெளியாவதற்கு போராடினார்கள் என்று கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.