பாடகி சைந்தவி குறித்து வெங்கட் பிரபு கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கோட் படம்:
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்து இருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதோடு இந்த படத்தில் டிஏஜிங், ஏஐ, மறைந்த நடிகர் விஜயகாந்த் கேமியோ ரோல் என பல விஷயங்களை வெங்கட் பிரபு சேர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
வெங்கட் பிரபு வீடியோ:
இந்நிலையில் கோட் படத்தின் பிரமோஷனின் போது கோட் படக்குழுவினர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, நான் கண்டெண்ட் காக ஒரு விஷயம் சொல்கிறேன். சைந்தவி எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். நான் அவரை ரொம்ப கட்டாயப்படுத்தி வற்புறுத்தி நடிக்க கேட்டேன்.
சைந்தவி குறித்து சொன்னது:
அதுவும் சென்னை 28 படத்தில் விஜயலட்சுமி நடித்த செல்வி கதாபாத்திரத்தில் நடிக்க தான் கேட்டேன். அவர், எனக்கு நடிப்பே வராது. என்னை விட்டுவிடுங்கள் என்று அலறினார். இதை நான் சொல்லட்டுமா என்று இவரை பார்த்த உடனே கேட்டதற்கு, வேண்டாம் கண்டக்ட் ஆக்கி விடுவார்கள் என்று சொன்னார். அதனால் நான் சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சைந்தவி திரைப்பயணம்:
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடகி சைந்தவி. இவர் பாடிய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட கலந்து வருகிறார். இதனிடையே இவர் ஜிவி பிரகாஷை திருமணம் செய்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தான் இவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. பின்திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது பலருக்கும் அதிர்ச்சி தான்.