தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து இருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என்ன பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய ஷூட்டிங் நடந்தது.
கோட் படம்:
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து நடிகர் விஜயின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியிருந்தது. இந்தப் பாடலை விஜய் பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் குறித்த தகவல்:
அதனை தொடர்ந்து கோட் படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடிய இப்பாடல் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் பாடலில் விஜயை இளமை தோற்றத்தில் ஸ்டைலாக காட்டியுள்ளார்கள். இந்நிலையில் நேற்று கோட் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, நண்பா நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே விஜய் தகவலின் படி இப்படத்தில் விஜய் SATZ ஏஜென்டாக நடிக்கிறார்.
https://www.youtube.com/watch?v=jxCRlebiebw
கோட் ட்ரைய்லர்:
மேலும், ட்ரெய்லரில் நடிகர் பிரசாந்த், விஜய் அறிமுகப்படுத்துவது போல் காட்டியுள்ளார்கள். அதேபோல், நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் ஏஐ மூலம் வருவது போல் காட்சிகள் இருக்கிறது என்று சொன்ன நிலையில், அந்த கட்சிகள் எதுவும் ட்ரெய்லரில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் பார்க்கும்போது கோட் ஒரு நல்ல ஆக்சன் பிளாக் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இருக்கும் என தெரிகிறது. அதோடு‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Captain Vijayakanth AI Role Confirmed in #GOAT 🫡🔥pic.twitter.com/n0sP6AzawR
— Ayyappan (@Ayyappan_1504) August 17, 2024
வெங்கட் பிரபு சொன்னது:
இந்த நிலையில் விஜயகாந்த் காட்சி குறித்து வெங்கட் பிரபு கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றிருந்தது. இதில் செய்தியாளர்கள், கோட் படத்தில் விஜயகாந்த் காட்சி இருக்கா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு வெங்கட் பிரபு, ஏஐ மூலம் விஜயகாந்த் காட்சியை கோட் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் அவர்களே கூறியிருந்தார். அது உண்மைதான். அவர்கள் சொன்னால் படத்தில் வரத்தான் செய்யும். நான் சொல்லவில்லை, அவர்கள் சொன்னால் கண்டிப்பாக வரும் என்று கூறியிருக்கிறார்.






