பொது மேடையில் மங்காத்தா 2 குறித்து பேசிய வெங்கட் பிரபு.! ரசிகர்கள் குஷி.! வீடியோ இதோ.!

0
754
mankatha

இந்த படத்தில் அஜித் ஒரு வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நடிகர் அஜித்திற்க்கு “மங்காத்தா” ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவே அமைந்தது என்றே கூறலாம்.

அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற ஹீரோகளின் ரசிகர்கள் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் மிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் வெங்கட் பிரபு.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர், மங்காத்தா 2 பண்ணலாமா வேண்டாமா என்று ஒரு யோசனை இருந்து கொண்டே வருகிறது. இருப்பினும் பெரிதாக எதிர்பார்ப்பை வைக்காதீர்கள். ஆனால், கண்டிப்பாக அஜித் சாருடன் ஒரு படம் இருக்கிறது என்று அவர் கூறியதும் அரங்கமே அதிர்ந்தது.

Advertisement