ஜோடி நிகழ்ச்சியில் ஆடிய வெங்கட் – நிஷாவை ஞாபகம் இருக்கா ? அவர்களுக்கு இவ்ளோ பெரிய மகளா ?

0
832
venkat
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று உருவான போதிலிருந்தே மக்களின் பொழுது போக்கு அம்சமாக சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் காலங்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் all-time பேவரைட்களில் ஒன்றாகவே சீரியல்கள் விளங்கி வருகிறது. மேலும், சமீப காலமாக வெள்ளித்திரையை நோக்கி செல்வதை விட மக்கள் சின்னத்திரை பக்கம் தான் அதிகம் செல்கிறார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரை தொடர்கள் மக்கள் மத்தியில் அதிக பங்கு வகிக்கிறது.

-விளம்பரம்-

வெங்கட் சுப்பிரமணியன் பிறந்த ஊர்:

அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்தே சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் சின்னத்திரை தொடர்களை தான் பார்த்து வருகின்றனர். இதனால் சினிமா நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெங்கட் சுப்பிரமணியன். இந்நிலையில் நடிகர் வெங்கட் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நடிகர் வெங்கட் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர்.

- Advertisement -

வெங்கட் நடித்த சீரியல்கள்:

இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர். இருந்தாலும் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். ஏன்னா, இவர் தமிழ் தொலைக்காட்சியில் தான் அதிகம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதிலும் நடிகை சுகன்யா நடித்த ஆனந்தம் தொடர் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்றே சொல்லலாம். மேலும், இவர் குலதெய்வம், செல்லமே, அலைகள், உறவுகள் சங்கமம், ரோஜா கூட்டம், ராஜகுமாரி, கல்யாணபரிசு, அத்திப்பூக்கள், திருமதி செல்வம் போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து இருக்கிறார்.

வெங்கட் சுப்பிரமணியன் குடும்பம்:

இவர் நடிகர் மட்டுமில்லாமல் மிக சிறந்த டான்ஸரும் ஆவார். இதனால் இவர் சூப்பர் சேலஞ்ச், ஜோடி நம்பர் 1 சீசன் 2 போன்ற பல நிகழ்ச்சிகளில் நடனமாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல தனியார் நிகழ்ச்சிகளில் கூட இவர் நடனமாடியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க இவர் நிஷா என்பவரை நீண்ட காலம் காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது.

-விளம்பரம்-

வெங்கட் நடித்து வரும் சீரியல்:

இவர்கள் மகளின் பெயர் மாயா. இப்படி தொடர்களில் கலகலப்பாக சென்று கொண்டு இருந்த வெங்கட் சிலகாலம் சீரியலில் நடிக்காமல் பிரேக் எடுத்துக்கொண்டிருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நம்ம வீட்டு பொண்ணு என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப் பட்டது. இந்த தொடர் ஜல்சா என்ற வங்காள மொழி தொடரின் மறுஆக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது.

வைரலாகும் வெங்கட்டின் குடும்ப புகைப்படம்:

இந்த சீரியலில் கதாநாயகனுக்கு சித்தப்பா கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்து ரசிகர்கள் பலரும் இதுதான் வெங்கட் சுப்பிரமணியன் குடும்பமா! இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா! மகளா! என்றும் கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement