மணிமேகலை மற்றும் பிரியங்கா சர்ச்சை குறித்து வெங்கடேஷ் பட் கொடுத்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை சில இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:
இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். ஆனால், தற்போது சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார்.
ப்ரியங்காவிற்கு ஆதரவு:
அதே போல் பாவனி , டிஜே பிளாக் ,சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் வெங்கடேஷ் பட், மணிமேகலை- பிரியங்கா இருவருமே எனக்கு தெரிந்த நபர்கள். இருவருக்கும் நடக்கும் சண்டையை ஏன் தேவையில்லாமல் சோசியல் மீடியாவில் பெரிய பிரச்சினையாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. நாளுக்கு நாள் சோசியல் மீடியா ரொம்ப மோசமாக இருக்கிறது.
வெங்கடேஷ் பட் பேட்டி:
ஒருவரை பற்றி எப்படி ரொம்ப தவறாகவும், மோசமாகவும் கமெண்ட் போடுகிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்தால் செருப்பாலே அடிப்பேன். இவர்கள் சண்டையை பார்க்கும் போது நம்ம வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் எப்படி சண்டை போடுவார்களோ? அப்படித்தான் இருக்கிறது. ஒரு அக்கா- தங்கைக்கு இடையே நடக்கும் சண்டை போலதான் இருக்கிறது. இரண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்தார்கள். பிரியங்கா ஒரு சீனியர் தொகுப்பாளர். கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார். அதேபோல் மணிமேகலையும் வீட்டை விட்டு வெளியே வந்து பல போராட்டங்களை தாண்டி தற்போது சோசியல் மீடியாவில் பெரிய அளவு பிரபலமாக இருக்கிறார்.
மணிமேகலை – பிரியங்கா குறித்து சொன்னது:
அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சின்ன பிரச்சனை தான். ஆனால், அதை சோசியல் மீடியாவில் வீடியோவாக போட்டு பெரிய அளவாக மாற்றி இருக்கிறார்கள், சோசியல் மீடியாவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததால் கண்டமேனிக்கு பேசுகிறார்கள். எதுவாக இருந்தாலும் பிரியங்கா- மணிமேகலை மட்டும் தான் இதைப் பற்றி பேச வேண்டுமே தவிர மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது. மாகாபா சொன்ன மாதிரி ஒரு வழியில் இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டால் நாம் எதையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடும். அப்படித்தான் அவர்கள் சண்டை போட்டு, அவர்களே சேர்ந்து கொள்வார்கள். இதைப்பற்றி யாரும் பேச தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.