எரிச்சலா இருக்கு, மலேசியாகாரங்க எங்களால இதெல்லாம் ஏத்துக்க முடியல, தயவு செஞ்சி நிறுத்துங்க – கமன்ட் செய்த பெண்ணிற்கு வெங்கடேஷ் பத் கொடுத்த பதிலடி.

0
1288
venkatesh
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது.

-விளம்பரம்-

மூன்று சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் குக்குகுகளாக ஷெரின், விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள்.

அதிலும் வெங்கடேஷ் பத் கோமாளிகளை வச்சி செய்து விடுவார். இவர் கோமாளிகளை அடிக்கடி பலமாக அடித்துவிடுகிறார் என்ற விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் அடுத்த 14 ஆம் தேதி புதிய யூடுயூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக முகநூலில் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் பெண் ஒருவர் இவரை குறை சொல்லி கமன்ட் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் ”நான் மலேசியாவில் இருந்து குக்கு வித் கோமாளி ரசிகை, நீங்கள் கோமாளியை நடத்தும் விதம் மிகவும் எரிச்சலாக இருக்கிறது தயவு செய்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருங்கள். அதை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நிறுத்துங்கள். மரியாதை கொடுத்து மரியாதை பெறுங்கள். நீங்கள் இதையெல்லாம் வெறும் ஜாலிக்காக மட்டும்தான் உண்மை இல்லை என்று சொன்னாலும் மலேசியாவை சேர்ந்த எங்களால் இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தயவுசெய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ இதனை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் ‘இது வெறும் டிவி நிகழ்ச்சி அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து பார்க்காதீர்கள். கவுண்டமணி, செந்தில அடிக்கவில்லையா ? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா ? ஜெர்ரி டாமை எரிச்சல்லூட்ட வில்லையா ? கொஞ்சமாவது வளருங்கள், இது வெறும் ஒரு நிகழ்ச்சி. நான் சொன்னேன் என்பதற்காக விஷயத்தை எடுத்து குடித்து விடுவீர்களா உங்களுக்கு என்று சுய புத்தி கிடையாதா’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement