குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது இதனால் தான் – முதன் முறையாக காரணத்தை போட்டுடைத்த வெங்கடேஷ் பட்

0
596
- Advertisement -

குமித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து வெங்கடேஸ் பட் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வித் முடிவடைந்து இருந்தது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். குறிப்பாக, இந்த நிகழ்ச்சிக்கு நம்பிக்கையாக இருந்த வெங்கடேஷ் பட் விலகியது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான்.

- Advertisement -

டாப் குக்கு டூப் குக்கு:

தற்போது இவர் சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற புதிய நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட்டின் VB Dace நிறுவனம் தான் தயாரிகிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், GP முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் களமிறக்கி இருக்கிறார்கள். இதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

நிகழ்ச்சி போட்டியாளர்கள் பட்டியல்:

இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சிங்கம் புலி, நடிகை சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சிவாங்கியின் அம்மா பின்னி, கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா உட்பட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி வருகிற மே 19ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கடேஷ் பட், நான் விஜய் டிவியில் 24 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

வெங்கடேஷ் பட் பேட்டி:

எனக்கு மீடியா புதுசு கிடையாது.. கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி என்ற பல சமையல் நிகழ்ச்சிகளை நான் விஜய் டிவியில் நடத்திருக்கிறேன். மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் என்னோடு ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே அந்த நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர், இயக்குனர்கள் எல்லோருமே எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் இருந்து விலகிய காரணம்:

குறிப்பாக நான் விஜய் டிவியில் இத்தனை வருடமாக சுதந்திரமாக வேலை செய்ததற்கு காரணமும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான். அவர்களுக்கும் விஜய் டிவிக்கும் இடையே சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் வெளியே வந்து விட்டார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் தான் கம்போர்ட் .அதனால் நானும் அவர்களோடு வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால்தான் நான் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement