இறுதியில் இது நடந்து விட்டது.! அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு.! வைரலாகும் புகைப்படம்.!

0
808
mankatha
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் ஹீரோவாக நடிப்பதை விட நெகடிவ் கதாபாத்திரக்த்தில் நடித்த படங்கள் தான் அதிக வெற்றி பெற்றது. வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’ படமும் அடக்கம்.

-விளம்பரம்-
Mankatha

இந்த படத்தில் அஜித் ஒரு வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நடிகர் அஜித்திற்க்கு “மங்காத்தா” ஒரு நல்ல திருப்புமுனை படமாகவே அமைந்தது என்றே கூறலாம். 

- Advertisement -

அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற ஹீரோகளின் ரசிகர்கள் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதே போல வெங்கட் பிரபுவும் அஜித் ஓகே சொன்னால் சரி என்று கூறிவந்தார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு அஜித்தை சமீபத்தில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு ‘இறுதியாக இது நடந்து விட்டது’ என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மங்காத்தா 2 வை பற்றி தான் சொல்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement