10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாராட்டோ காட்சியில் சூரி.! வெண்ணிலா கபடி குழுவின் ஸ்னீக் பீக் வீடியோ.!

0
2906
soori
- Advertisement -

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா குழு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா, சூரி, அப்பு குட்டி போன்ற பலர் நடித்த இந்த திரைப்படத்தை முகுந்த் ராஜன் தயாரித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்ல திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சூரியும் ஒரு காமெடி நடிகர் என்ற பெயரை பெற்றார். இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயராகியுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமணம் முடிந்தது.! வெளியான புகைப்படங்கள்.! 

- Advertisement -

வெண்ணிலா கபடி குழு படத்தின் முதல் பாகத்தில் சூரியின் பரோட்டோ காமெடி ரசிகர்கள் அனைவராலும் மிகவும் கவனிக்கப்பட்டது. சொல்லப்போனால் இந்த படத்தில் பரோட்டா காமெடியில் நடித்த பிறகே நடிகர் சூரிக்கு பரோட்டோ சூரி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது.

தற்போது வெண்ணிலா கபடி குழு 2 படத்திலும் சூரிக்கு அதே பரோட்டோ காமெடி இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெண்ணிலா 2 படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement