இந்த கொடுமையெல்லாம் யாருக்கும் நடக்க கூடாது – ஹரியின் இறப்பிற்கு கூட வராத பிரபலங்கள். தன்னந்தனியாக அழுதுகிடந்த மனைவி.

0
486
hari
- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில்நடித்திருந்தார். அதற்குப்பிறகு இவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல யூடுப் சேனல் நடிகர் ஹரி வைரவனின் நிலை குறித்து பேட்டி ஒன்று எடுத்து இருந்தார்கள். அதில் அவருடைய மனைவி , வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் என்னுடைய கணவர் ஹரி. எங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ் தான் நடந்தது. நன்றாகத்தான் எங்களுடைய வாழ்க்கை இருந்தது. என் கணவர் ஹரி என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். பலரும் அவர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

- Advertisement -

நடிகர் ஹரி நிலை குறித்து மனைவி அளித்த பேட்டி:

இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை விடாமல் நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்து கோமா ஸ்டேஜில் இருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை? பின் நான் அவர் அருகில் உட்கார்ந்து தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளையும், பழைய நிகழ்ச்சிகளையும் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன். இருந்தும் அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்தார். அதோடு அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்தது. அதனால் அவர் கை,கால் எல்லாம் வீங்கி போனது.

கோமாவில் இருந்த ஹரி:

பலரும் அவர் பிழைப்பது கஷ்டம் என்று சொன்னார்கள். ஆனால், நான் என் நம்பிக்கையை விட வில்லை. அவருக்கு கை, கால் நடக்க முடியாமல் பேச்சு வராமல் போய்விட்டது.என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை. பிளாக் பாண்டி அண்ணா, கார்த்திக் அண்ணா,சரவணா அண்ணா போன்ற என் கணவருடன் பணிபுரிந்த நண்பர்களுடன் உதவியால் தான் செய்ய முடிந்தது. அவர்கள் தான் எனக்கு பக்க துணையாக இருந்தார்கள். பலரும் என் கணவரின் நிலையை அறிந்து விசாரித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

கடைசி வரை போராடிய மனைவி :

இன்னும் ஆறு மாதம் மருத்துவம் செய்தால் என் கணவர் முழுமையாக குணம் அடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கணவர் என்னுடன் இருந்தால் மட்டும் போதும். அதற்காக தான் நான் போராடினேன். என் கணவரை பார்த்துக்கொள்ள எனக்கு தெம்பு இருக்கிறது என்று கண் கலங்கியபடி கூறி இருந்தார் ஹரி மனைவி. இப்படி ஒரு நிலையில் நடிகர் ஹரி வைரவன் நேற்று இரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

எட்டிக்கூட பார்க்காத பிரபலங்கள் :

ஹரியின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை அவரது இறப்பிற்கு ஒரு பிரபலங்கள் கூட நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கவில்லை. அவரது இறுதி மரியாதைக்காக அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அங்கு வெகு சிலர் மட்டுமே இருக்கின்றனர். மேலும், தனது கணவரின் உடல் அருகில் தனியாக அமர்ந்துகொண்டு இருக்கும் ஹரியின் மனைவியை பார்க்கும் போது இந்த கொடுமையெல்லாம் யாருக்கும் வரக்கூடாது என்று தான் தோன்றுகிறது.

Advertisement