பெட்டிக்கடை நடத்தி கணவரை காப்பாற்றி வந்த மனைவி – சிகிச்சை பலநின்றி உயிரிழந்த வெண்ணிலா கபடி குழு பட நடிகர்.

0
240
hari
- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில்நடித்திருந்தார். அதற்குப்பிறகு இவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-138.png

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல யூடுப் சேனல் நடிகர் ஹரி வைரவனின் நிலை குறித்து பேட்டி ஒன்று எடுத்து இருந்தார்கள். அதில் அவருடைய மனைவி , வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் என்னுடைய கணவர் ஹரி. எங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ் தான் நடந்தது. நன்றாகத்தான் எங்களுடைய வாழ்க்கை இருந்தது. என் கணவர் ஹரி என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். பலரும் அவர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

- Advertisement -

நடிகர் ஹரி நிலை குறித்து மனைவி அளித்த பேட்டி:

இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை விடாமல் நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்து கோமா ஸ்டேஜில் இருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை? பின் நான் அவர் அருகில் உட்கார்ந்து தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளையும், பழைய நிகழ்ச்சிகளையும் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன். இருந்தும் அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்தார். அதோடு அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்தது. அதனால் அவர் கை,கால் எல்லாம் வீங்கி போனது.

கோமாவில் இருந்த ஹரி:

பலரும் அவர் பிழைப்பது கஷ்டம் என்று சொன்னார்கள். ஆனால், நான் என் நம்பிக்கையை விட வில்லை. அவருக்கு கை, கால் நடக்க முடியாமல் பேச்சு வராமல் போய்விட்டது. மேலும், கோமாவில் இருந்து வந்த பிறகு அவர் நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அவர் அப்போது பயங்கர உடல் எடை போட்டு இருந்ததார். என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை. பின் மருத்துவர்கள் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சமாக நடக்க வைக்க முயற்சி செய்தோம். தற்போது அவர் கொஞ்சம் நன்றாக நடக்கிறார்,பேசுகிறார். இது எல்லாம் நான் தனியாளாக செய்யவில்லை.

-விளம்பரம்-

ஹரி வைரவனுக்கு உதவிய நண்பர்கள் :

பிளாக் பாண்டி அண்ணா, கார்த்திக் அண்ணா,சரவணா அண்ணா போன்ற என் கணவருடன் பணிபுரிந்த நண்பர்களுடன் உதவியால் தான் செய்ய முடிந்தது. அவர்கள் தான் எனக்கு பக்க துணையாக இருந்தார்கள். பலரும் என் கணவரின் நிலையை அறிந்து விசாரித்து இருந்தார்கள். இப்போது அவரை நடக்க வைப்பதற்கு 10 நாட்களுக்கு 8000 ரூபாய் என்ற மருத்துவ செலவு ஆகிறது. நாங்கள் இருந்த சொந்த வீட்டை விற்று தான் இவருடைய கடனையும் மருத்துவ செலவையும் பார்த்துக்கொண்டிருந்தேன். தற்போது ஒரு பெட்டிக்கடை வைத்து இருக்கிறேன்.

காலமான ஹரி :

அதில் வரும் வருமானத்தை வைத்து தான் குடும்ப செலவையும், அவருக்கு மருத்துவச் செலவையும் பார்த்து வருகிறேன். ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. இன்னும் ஆறு மாதம் மருத்துவம் செய்தால் என் கணவர் முழுமையாக குணம் அடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கணவர் என்னுடன் இருந்தால் மட்டும் போதும். அதற்காக தான் நான் போராடினேன். என் கணவரை பார்த்துக்கொள்ள எனக்கு தெம்பு இருக்கிறது என்று கண் கலங்கியபடி கூறி இருந்தார் ஹரி மனைவி. இப்படி ஒரு நிலையில் ஹரி  நேற்று இரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement