சின்மயி-வைரமுத்து விவகாரம் தொடர்பாக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் பாடகி மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞரும் ஆவார். இது ஒரு பக்கம் இருக்க, சின்மயி எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகள், அத்துமீறல், சமூக ப்ரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.
முத்து மழை விவகாரம்:
இது ஒரு பக்கம் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் விவகாரம் தான் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து வெளியாகி இருக்கும் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது.

சின்மயிக்கு ஆதரவு:
இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை கேட்டு எல்லோரும், தீ பாடியது விட சின்மயி பாடிய வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை போட்டு இருந்தார்கள். அதோடு இந்தக் குரலையாட இத்தனை வருடமாக பேன் செய்து வைத்திருந்தீர்கள்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள்.
மீண்டும் கிளம்பிய பஞ்சாயத்து:
இதை அடுத்து சின்மயி, தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டதும் அவர் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து நிறைய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
அதனால் நாளுக்கு நாள் சின்மயிக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே வருகிறது. இதை அடுத்து பிரபலங்கள் சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும் சிலர் வைரமுத்து ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் வைரமுத்துக்கு ஆதரவாக அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtube.com/shorts/nqBFzPlCQ10?si=t0CdnuDg_lHr8lFe
வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி:
அதில் அவர், மீடூ விவகாரம் ஒரு கண்றாவியான ஒன்னு. ஏன் இப்ப சொல்றாங்க, அன்னைக்கு அவங்களுக்கு ஏதோ ஒரு வேலை ஆகணும் தானே அமைதியாக இருந்தார்கள். இப்போ திடீரென்று வந்து மீடூ என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அப்போ என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்களுடைய தேவைக்காக அமைதியாக இருந்துவிட்டு அவர் பேரன், பேத்தி எடுத்து பேரும் புகழும் எடுத்து வளர்ந்த பின்னர் மீடூ என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தால் கடுப்பாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






