தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற காமெடி நடிகனாக வலம் வந்தவர் வெண்ணிறாடை மூர்த்தி இவர் தமிழில் பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் காமெடியன்கள் டபுள் மீனிங் காமெடிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதை தான் மக்களும் விரும்புகின்றனர். இந்த நிலையில் வெண்ணிறாடை மூர்த்தி அப்போதே டபுள் மீனிங் காமெடிகளை பயன்படுத்தியவர்.
வெண்ணிறாடை மூர்த்தி 1936 ல் சிதம்பரத்தில் பிறந்தவர். வெண்ணிறாடை மூர்த்தியின் தந்தை ஒரு அட்வோகேட் அதனால் வெண்ணிறாடை மூர்த்தியும் சட்டம் படித்தவர் .
இவர் 1965 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் மூலம் தான் அவரது பெயரின் பின்னால் வெண்ணிறாடை எனும் பட்ட பெயர் வந்தது.இவர் பி ஏ பி எல் முடித்து விட்டு டூரிங் பணியில் பணியாற்றி வந்தார்.வேறு பணியை தேடியும் வந்தவர் வெண்ணிறாடை மூர்த்தி. அப்போது தான் கிருஷ்ண மூர்த்தி ஜோதிடரை பார்த்தார் .அவர் நீ கண்டிப்பாக சினிமாவில் நடிப்பாய் என்று கூறினார்.
அதுவும் அக்டோபர் 30 1964 குல் நடிப்பாய என்றும் கூரியயுள்ளார் .அப்போது அவர் எங்கள் குடும்பத்தில் சினிமா பாக்கவே அனுமதிக்க மாட்டார்கள் நீங்கள் என்ன இப்படி சொல்ட்ரிங்க என்று ஜோதிடரை கிண்டல் செய்தார் வெண்ணிறாடை மூர்த்தி.
பின்னர் ஜோதிடர் சொன்ன மாதிரியே அவரது நண்பர் என் சி சக்கரவர்த்தி என்பவர் மூலம் வெண்ணிறாடை எனும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.பிறகு அந்த ஜோதிடரரை பார்த்த வெண்ணிறாடை மூர்த்தி அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அப்போது அவர் நீ தடிஊன்றி நடக்கும் வரை சினிமாவில் நடிப்பாய் என்றும் கூறியுள்ளார்.
அதன் பிறகு வெண்ணிறாடை மூர்த்தி 250 படங்களுக்கு மேல் நடித்தும். ஜோதிடத்தை படித்து அதில் டாக்டர் பட்டமும் பெற்றார் வெண்ணிறாடை மூர்த்தி.இவர் நடிப்பு மட்டுமின்றி கதையம் நன்றாக ஏழுதுவார்.கமல் நடித்த மாலைசூடவா படத்தில் ரைட்டராய் இருந்தவர். அதை தொடர்ந்து சன் டிவி யில் மீண்டும் மீண்டும் சிரிப்பு எனும் தொடரின் கதை அமைப்பாலரும் இவர் தான். இந்த தொடர் 11 ஆண்டுகள் ஓடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல் 5 புத்தகங்கள் ஏழுதியுள்ளார் வெண்ணிறாடை மூர்த்தி.இவர் கடைசியாக நடித்த படம் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க.