வெள்ளையா இருக்கவன் தப்பு பண்ண மாட்டானா ? இளம் இயக்குனரை வெளுத்து வாங்கிய வெற்றிமாறன்- வீடியோ.

0
1242
vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து இவர் தான் என்று சொல்லலாம். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கிய படங்களில் புதுப்பேட்டை, வட சென்னை போன்ற படங்களில் வட சென்னையின் சாயல் அதிகம் காணப்படும், மேலும், சமூகத்தில் வட சென்னை மக்கள் மீது இருக்கும் பார்வையையும் மாற்றியவர் வெற்றிமாறன். இந்த நிலையில் இயக்குனர் வெற்றி மாறன், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த போது ‘ஒரு நாளைக்கு ஒரு ஜிபி’ என்ற குறும்படத்தை இயக்கிய இளம் இயக்குனரை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார்.

அந்த குறும்படத்தில் சேரியில் வாழும் சப்ப, வெல்ல என்ற இரண்டு இளைஞர்கள் குப்பை அள்ளும் வேலையை செய்து வருவார்கள். அப்போது சப்ப என்பவருக்கு குப்பை அள்ளும் போது ஒரு செல்போன் கிடைக்கும். அதன் மூலம் அவர் ஆபாச படத்தை பார்த்துவிட்டு ஒரு குழந்தையை கற்பழித்து அதை செல்போனில் படம் எடுத்து விடுவார். அந்த வீடியோவை காணும் வெள்ளை என்பவர், சபையை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுவார். இந்த குறும்படத்தை பார்த்துவிட்டு தனது கருத்து கூறும் வெற்றிமாறன் வெள்ளையாக இருப்பவர்கள் தவறு செய்ய மாட்டார்களா ? என்று அந்த இயக்குனரை வெளுத்து வாங்கியிருக்கிறார் இன்னும் என்னென்ன அவர் கூறி இருக்கிறார் என்பதை வீடியோவில் நீங்களே பாருங்கள்

-விளம்பரம்-
Advertisement