சிறப்பாக தொடங்கிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகனின் திருமண கொண்டாட்டம்- எங்கே? எப்போது தெரியுமா?

0
207
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்தின் திருமணம் கொண்டாட்டம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் ரோகினி-மனோஜ் செய்யும் பித்தலாட்ட வேலைகள் குறித்த ட்ராக் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், instagram ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்குப் பின் இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறக்கடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார்.

- Advertisement -

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இதற்கிடையில் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய காதலியை வைஷ்ணவியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். இவரும் சீரியல் நடிகை தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். முதல் சீரியலிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

வெற்றி வசந்த் -வைஷ்ணவி காதல்:

அதை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை வெளிப்படையாக அறிவித்து இருந்தார்கள். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் வெற்றி வசந்த், கூடிய விரைவிலேயே எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

-விளம்பரம்-

வெற்றி வசந்த்- வைஷ்ணவி நிச்சயதார்த்தம்:

உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று கூறி இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இவர்கள் இருவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

திருமணம் குறித்த அப்டேட்:

இப்படி இருக்கும் நிலையில் வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. காலை 9 மணி அளவில் இவர்களுடைய திருமணம் சென்னையில் நடக்க இருக்கிறது. தற்போது திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் நேற்று இரவு தான் சங்கீத் பங்க்ஷன் நடைபெற்றது. இதில் வெற்றி வசந்த்- வைஷ்ணவி ஆடல், பாடல் என்று தங்களுடைய திருமண விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement