தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து ஆண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு-கமல் நடிப்பில் வெளிவந்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து சிம்பு தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் சிம்பு அவர்கள் ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்கிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படம் காலேஜ் பின்னணியில் gen z கொண்டாடும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக இந்த படத்தில் கயாடு நடிக்கிறார். மேலும், ஹீரோவாக கலக்கும் சந்தானம் சிம்புவுடன் இந்த படத்தில் இணைந்திருப்பது பலருக்குமே ஆச்சரியம்தான்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் சிம்புவின் 49 வது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
சிம்பு திரைப்பயணம்:
தற்போது சிம்புவின் 49-வது படத்தை வெற்றிமாறன் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது வடசென்னையில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் கவின், இயக்குனர் நெல்சன், ஆண்ட்ரியா, சமுத்திரகனி என பல பிரபலங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படம் வடசென்னை 2 என்றும் அதற்கான உரிமை வெற்றிமாறன் இடம் இல்லாததால் 20 கோடி ரூபாய் கொடுத்து என்ஓசி சான்றிதழ் பெற வேண்டும் என்று தனுஷ் தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் - வெற்றிமாறன் சர்ச்சை:
அதோடு தனுஷ் -வெற்றிமாறன் குறித்து பல வதந்திகள் இணையத்தில் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நானும் சிலம்பரசனும் சேர்ந்து வடசென்னை 2 படம் பண்ணுவதாக பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. உண்மையில் அது வட சென்னை 2 படம் கிடையாது. தனுஷ் நடிக்கும் அன்புவின் எழுச்சி தான் வடசென்னை 2. ஆனால், சிம்பு நடிக்கும் படம் வடசென்னை சுற்றி நடக்கும் கதை, வட சென்னையில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், சின்ன சின்ன விஷயங்கள் இந்த படத்தில் வரும்.

வெற்றிமாறன் விளக்கம்:
மேலும், வடசென்னை படத்தினுடைய ஒட்டுமொத்த உரிமையாளர் தனுஷ் தான். அப்படி இருக்கும்போது அது தொடர்பான கதாபாத்திரங்களையோ, காட்சிகளையோ நாம் பயன்படுத்தும் போது அவருக்கு அதற்கான பணத்தை கொடுத்து தான் ஆக வேண்டும். அதைக் கேட்பதற்கு அவருக்கு முழு உரிமையும் இருக்கிறது. அதை நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. நான், சிலம்பரசன், தயாரிப்பாளர் தாணு மூன்று பேருமே சந்தித்த அடுத்த நாளே தனுஷிடம் இதைப் பற்றி பேசினேன். அப்போது நான், இந்த படத்தை என்னால் தனியாகவும் செய்ய முடியும். அப்படி இல்லை என்றால் வடசென்னையில் உள்ள கதாபாத்திரங்களை இதில் கொண்டு வரவும் முடியும். அந்த முடிவு உங்களுடையது என்று சொன்னேன்.
தனுஷ் சொன்னது:
அதற்கு தனுஷ், அதைப்பற்றி எல்லாம் நீங்கள் எதையும் நினைக்காதீர்கள். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை செய்யுங்கள். நான் என்னுடைய குழுவிடம் சொல்லிவிடுகிறேன். ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழையும் கொடுத்து விடுகிறேன். அதற்காக எந்த பணமும் தேவையில்லை என்று சொன்னார். youtube இல் தனுஷுக்கும் எனக்குமான உறவு குறித்து பல வதந்திகள் வருகிறது. எங்கள் உறவு ஒரு படத்தால உடைக்கக்கூடிய உறவு கிடையாது. சமீபத்தில் கூட எனக்கு பணம் நெருக்கடி வந்த போது தனுஷ் தான் உதவி செய்திருந்தார். அதேபோல் வாடிவாசல் படத்தை பொருத்தவரை நடிகர்கள், விலங்குகளின் பாதுகாப்பிற்காக சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. முழு எழுத்து பணிக்கும் நேரம் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.






