இயக்குனர் ஆவதற்கு முன்பே படத்தில் நடித்துள்ள வெற்றிமாறன் – அதுவும் இவர் படத்தில் எப்படி இருக்கார் பாருங்களேன்.

0
1841
vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து இவர் தான் என்று சொல்லலாம். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கதிர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஸ்ரீதேவி விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

ரிச்சர்ட் ரிஷி சினிமா துறையில் அறிமுகமாகியது இந்த படத்தின் மூலம் தான். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் வெற்றி மாறன் அவர்கள் ஒரு சில காட்சியில் நடித்திருக்கிறார். தற்போது அந்த படத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement