வெற்றிமாறன் எழுதிய முதல் கதையே விஜய்க்கு தான். ஆனால், தவறிய காரணம் இது தான். இந்த வீடியோ பாத்திருக்கீங்களா ?

0
6712
vetri

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது.

https://www.instagram.com/p/CBH_z21gP1N/?igshid=1ffctcpfsim46

இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே இவர் தான் என்று சொல்லலாம். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றியை கொடுத்தது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் விஜய் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, நான் முதன் முதலாக விஜய்யை வைத்து தான் கதை ஒன்று எழுதினேன். ஆனால், என்னால் கதை சொல்ல முடியவில்லை. ஏன்னா, எனக்கு கதை ஒழுங்கா சொல்ல வராது. அவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டார். இருந்தாலும் அது விஜய் இந்த இடத்துக்கு வருவதற்கான தொடக்கம்.

நான் அவருக்காக 1999 ஆம் ஆண்டு கதையை எழுதினேன் என்று கூறினார். கூடிய விரைவில் வெற்றிமாறன்-விஜய் கூட்டணியில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தளபதி விஜய் அவர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement