உதவி இயக்குனரா நீ, ரொம்ப துயரமான கேள்விப்பா இது- விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு நக்கல் பதில் அளித்த வெற்றிமாறன்.

0
93263
vijay-vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் மாபெரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் இவர் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் பல படங்களில் மற்றும் தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றறி இருக்கிறார். அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதோடு இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கும் தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாட பட்டது.

இதையும் பாருங்க : 500 படங்களுக்கு மேல் நடித்தும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் குள்ளமணி எப்படி இறந்தார் தெரியுமா ?

- Advertisement -

இந்த விழாவில் பேசிய நடிகர் பவன், கடைசியாக நான் நடித்த குருவி திரைப்படம் 150 நாட்கள் ஓடியது என்று வெற்றி விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை என்று கிண்டலடித்தார். விஜய் குறித்து பவன் இப்படி பேசியதால் விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பவன் தனது பேச்சுக்கு விஜய் மற்றும் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் பிரெஸ் மீட் ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறனிடன் இளையதளபதி விஜயுடன் எப்போது படம் பண்ணுவீர்கள்  என்று கேள்வி கேட்ப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், உதவி இயக்குனரா நீ, ரொம்ப துயரமான கேள்விப்பா இது. ரொம்ப துயரமான கேள்வி. ஒரு நிமிஷம் எல்லாரும் ஆப் பண்ணுங்க என்று கூறிவிட்டு அதற்கான காரணத்தை தனியா சொல்றேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே பவன் பேச்சால் கடுப்பாகி உள்ள விஜய் ரசிகர்கள் தற்போது வெற்றிமாறனின் இந்த பேச்சால் மேலும் கடுப்பாகியுள்ளார்கள்

-விளம்பரம்-
Advertisement