வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் உடன்பிறவா தங்கையாக நடித்த நடிகையா இது? சும்மா எப்படி இருகாங்க பாருங்க.

0
518
- Advertisement -

விஜயின் வேட்டைக்காரன் படத்தில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் வேட்டைக்காரன்.

-விளம்பரம்-

இந்த படத்தை பாபுசிவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அனுஷ்கா செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே வேற லெவல் ஹிட். மேலும், இந்த படத்தில் விஜயின் தோழியாக நடித்திருந்தவர் நடிகை சஞ்சிதா படுகோன். இவர் கன்னட மொழி நடிகை.

- Advertisement -

சஞ்சிதா படுகோன் குறித்த தகவல்:

இவர் கன்னட மொழியின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டைக்காரன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சஞ்சிதா படுகோன் லேட்டஸ்ட் புகைப்படம்:

மேலும், இவர் தெலுங்கு, கன்னடம் மொழியில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சஞ்சிதா படுகோன்லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் படு மார்டனாக இருக்கிறார். இதை பார்த்த பலருமே வேட்டைக்காரன் படத்தில் வந்த நடிகையா இவர்! என்று ஆச்சரியத்தில் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

லியோ படம்:

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகிஇருந்தது . இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவந்தனர்.

தளபதி 68:

இதை அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபு தேவா, மீனாட்சி சௌத்திரி உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement