தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையே மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு வருகிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த புயலால் அதிக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டினுள்ளர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது.
அதோடு புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் எல்லாம் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையினுடைய பல தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதனால் போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது.
இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.மெரினா, பெசன்ட் நகர், எண்ணூர், பழவேற்காடு போன்ற பட இடங்களில் கடல் கொந்தளிப்புடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகவே, தொடர் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கன மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டது போல பிரபலங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர் லொள்ளு சபா ஷேஷு மழை வெள்ளத்தில் சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கி வந்து இருக்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ‘ போகும்போது பைசா கொண்டு போனேன் வரும்போது வாட்டர் கேன் பால் பாக்கெட் வாங்கிட்டு வந்தேன் 500 மீட்டர் கடைக்குச் செல்ல பள்ளிக்கரணை 189 வந்து வட்டச் செயலாளர் பாபு அவர்கள் இரு போட்டுகளை அனுப்பி வீட்டை விட்டு வெளியே செல்ல நினைத்த குடும்பங்களுக்கு உதவினார்’ என்று பதிவிட்டுள்ளார்.