வெயில் படத்தில் நடித்த நடிகையா இவங்க ? இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே !

0
21033
veyil movie

2006ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த படம் வெயில். இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியாங்கா நாயர். இவர் 1985ஆம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.கல்லூரியில் படித்துக்கொண்டு மாடலிங் செய்து வந்த பிரியங்கா, சில மலையாள சீரியல்களிலிம் நடித்து வந்தார். அதன்பின்னர் தனது 21 வயதில் வெயில் பட ஆடிஷனில் கலந்துகொண்டு தன் நடிப்பு திறமை மூலம் தேர்வானார் பிரியங்கா.

priyanka-nair-actress

2006ல் வந்த வெயில் படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்காக தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றது. பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டிகு ஜோடியாக நடித்துள்ளார்.

தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு முகுந்த் ராம் என்ற மகன் பிறந்தார்

priyanka

priyanka-nair

திருமணத்திற்கு பிறகு பிரியங்காவை நடிக்க வேண்டாம் என கூறினார் லாரன்ஸ் ராம். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின்னர் தன் சொந்த ஊருக்கே சென்று பட வாய்ப்புகள் தேடினார் பிரியங்கா. தற்போது ‘தீயோர்க்கு அஞ்சேல்’ என்ற தமிழ் படத்திலும், ‘முள்ளப்பூ பொட்டே’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் பிரியங்கா.