ஷூட்டிங் ஸ்பாட்டில் “சூர்யா ஜோதிகாவை” கலாய்த்த விஜய் ! ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா ?

0
7672
vijay

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளான அஜித்-ஷாலினி ,பிரசன்னா-சினேகா மற்றும் சூர்யா-ஜோதிகா இதில் மிகவும் பிரபலமான ஜோடி தான் சூர்யா-ஜோதிகா.
Surya - Jyothikaநடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சுமார் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள்.இவர்கள் இருவரும் இணைத்து மாயாவி, காக்க காக்க போன்ற படங்களில் நடித்தனர்.

இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய போது தான் விஜய்,சூர்யா மற்றும் ரமேஷ் கண்ணா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் கமல் ,தேவயானி ,ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்த ‘தெனாலி’ படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது.
vijay இந்த இரண்டு படங்களிளும் நடிகர் ரமேஷ் கண்ணா நடித்து வந்தார்.’ப்ரண்ட்ஸ்’ படப்பிடிப்பு முடிந்து விட்டு ‘தெனாலி’படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவார் ரமேஷ்கண்ணா.

அப்போது ப்ரண்ட்ஸ் ஷுட்டிங் முடிந்து தெனாலி ஷுட்டிங் செல்லும் போது ஜோதிகாவிடம், ‘மேடம் உங்களை சூர்யா கேட்டார்’என்று சொல்ல, ஜோதிகா சிரித்துக்கொண்டே ‘நானும் அவரை கேட்டேன் என்று சொல்லுங்கள்’ என்று சொல்வாராம்.
surya jyothika திரும்பவும் ரமேஷ் கண்ணா ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பிற்கு வந்து சூர்யாவிடம் கூறும் போது நடிகர் விஜய் மற்றும் ரமேஷ் கண்ணா இருவரும் ,சூர்யா-ஜோதிகாவை ஜாலியாக கிண்டல் செய்வார்களாம்.