பிக் பாஸ் சீசன் 8ல் டாப் 5 போட்டியாளர்கள் பற்றி விசித்ரா கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைராக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். பின் கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே வந்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இவர்கள் வந்தவுடன் பிக் பாஸ் வீடே ரணகளமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளரும் தங்களுடைய கருத்துக்களை சொல்வதாக மற்ற போட்டியாளர்களை வைத்து செய்கிறார்கள். தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் டாப் 5ல் இடம் பிடிப்பவர்கள் குறித்து விசித்ரா கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாப் 5 லிஸ்ட்:
ஐந்தாவது இடத்தை பவித்ரா பிடிப்பார். அவர் வீட்டிற்குள் ரொம்ப அமைதியாகவும் சூழ்நிலை கையாண்டு கொண்டும் விளையாடுகிறார்.
நான்காவது இடத்தில் ராயன் தான் இருப்பார். ராயன் சூப்பர் ஆட்டக்காரர்.
மூன்றாவது இடத்தில் ஜாக்லின். எப்படிப்பட்ட சவால்களையும் நேரடியாக அவர் சந்திக்கிறார்.
இரண்டாவது இடத்தில் முத்துக்குமரன். அவர் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ரொம்ப தெளிவான மனிதர்
முதல் இடத்தில் தீபக். இவர் கடினமான சூழ்நிலையுமே ரொம்ப சாமர்த்தியமாக கையாளுகிறார் என்று கூறி இருக்கிறார்.
விசித்ரா குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த பொற்கொடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருந்தார். இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின் இவர் ஹோட்டல் மேனேஜர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு விசித்ரா சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். அதன் பின் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்.