வித்தியாசமான பாணியில் விதார்த் நடித்த லாந்தர் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
185
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விதார்த். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லாந்தர்’. இந்த படத்தை சஜி சலீம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எம் சினிமா ப்ரொடக்சன் பேனரின் கீழ் ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இருக்கிறார். திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

கோயம்புத்தூர் பகுதியில் படத்தின் கதை நகர்கிறது. படத்தில் ஏ சி பி அரவிந்தாக ஹீரோ விதார்த் வருகிறார். இவர் ஆரம்பத்திலேயே கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை கைது செய்கிறார். இப்படி இருக்கும்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சாலையில் செல்பவர்களை கொடூரமாக தாக்கிக் கொண்டிருக்கிறார். இவரைப் பிடிக்க செல்லும் போலீஸ் அதிகாரிகளையும் அந்த நபர் தாக்குகிறார்.

- Advertisement -

இந்த சைக்கோவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று அரவிந்துக்கு ஆர்டர் வருகிறது. தீவிரமாக அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் விதார்த் இறங்கினார். இறுதியில் அந்த சைக்கோவை விதார்த் பிடித்தாரா? அந்த சைக்கோ யார்? எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. போலீஸ் அதிகாரியாக விதார்த் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவருடைய மனைவியாக ஸ்வேதாவும் தனக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். ஒரு வித்தியாசமான திரில்லர் பாணியில் இயக்குனர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், அதில் அவர் வெற்றி பெற்றாரா? என்றால் சந்தேகம்தான். காரணம் இதே பாணியில் நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. கொஞ்சம் வித்தியாசத்தை காண்பித்து இந்த படத்தை விறுவிறுப்பாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

-விளம்பரம்-

அதோடு படத்தில் சீரியஸான காட்சிகள் கூட சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. டெக்னிக்கல், எடிட்டிங் வேலை எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரமாதமாக இல்லை. முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதி ரொம்ப ரொம்ப சுமார். பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் நன்றாகவே இல்லை. நடிகர்கள் தேர்விலும் இயக்குனர் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படமாக லாந்தர் இருக்கிறது.

நிறை:

விதார்த் நடிப்பு ஓகே

பின்னணி இசை நன்றாக இருக்கிறது

திரில்லர் பாணியில் இயக்குனர் கதையை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை

குறை:

நடிகர்கள் தேர்வில் இன்னும் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்

டெக்னிக்கல் வேலையில் அதிக கவனம் வேண்டும்

இரண்டாம் பாதி நன்றாகவே இல்லை

கிளைமாக்ஸ் காட்சிகள் சரியாக அமையவில்லை

நிறைய லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் லாந்தர் – தோல்வி

Advertisement