மேலும் மேலும் சிக்கலை சந்திக்கும் அஜித் – விடாமுயற்சி படத்தின் முக்கிய நபர் திடீர் மரணம்.

0
1280
- Advertisement -

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் திடீரென்று இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.தற்போது இந்த படத்தினுடைய முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக அஜித், திரிஷா, இயக்குனர் மற்றும் பட குழுவினர் அனைவரும் அஜர்பைஜானுக்கு சென்று இருக்கிறார்கள். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் இறந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கலை இயக்குனர் மிலன் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான கலை இயக்குனராக இருந்தவர் மிலன். இவர் முதலில் கலை இயக்குனர் சாபு சிரிலிடம் உதவிய உதவியாளராக பணிபுரிந்து இருந்தார். அப்போது சாபு சிரில் பணியாற்றிய சிட்டிசன், தமிழன், ரெட், அந்நியன் போன்ற படங்களில் எல்லாம் மிலன் உதவியாளராக பணியாற்றியிருந்தார். அதற்கு பிறகு தான் மிலன் 2006 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகியிருந்த கலாபக் காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். அதற்குப் பிறகு ஓரம்போ படத்தில் பணியாற்றிய போது தான் அஜித் பட வாய்ப்பு மிலனுக்கு கிடைத்தது. முதன் முதலில் இவர் அஜித்தின் பில்லா படத்தில் தான் கலை இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

விடாமுயற்சி படத்தில் மிலன்:

அந்த வேலைகள் அஜித்திற்கு பிடித்து போனதால் தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த ஏகன், வீரம், விவேகம், வேதாளம் போன்ற பல படங்களில் அஜித் வாய்ப்பு அளித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் மிலன் அவர்கள் விஜய்யின் வேலாயுதம், ரஜினியின் அண்ணாத்த போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றி இருந்தார். தற்போது இவர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் கலை இயக்குனராக பணியாற்றி இருந்தார். விடாமுயற்சி படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு சென்று இருக்கிறார்கள்.

கலை இயக்குனர் மிலன் மரணம்:

இந்நிலையில் இன்று காலை கலை இயக்குனர் மிலனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை பட குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால், செல்லும் பாதி வழியிலேயே மிலன் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து கலை இயக்குனர் மிலன் இழப்பிற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவருடைய உடலை சென்னைக்கு கொண்டு வர இரண்டு நாட்கள் ஆகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது

Advertisement