உலக நாடுகள் அனைத்தும் இந்த கரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்க உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலர் போராடி வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் 500 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது.
இந்தியாவில் இந்த பாதிப்பை தடுக்க இந்திய பிரதம மோடி அவர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனை மீறியும் ஒரு சில பேர் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுடைய குடும்பத்தை விடுத்தும், தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பெண் ஒருவர் தன் கடமை செய்த போலீஸ் அதிகாரியின் மீது எச்சில் துப்பி அவதூறாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும், முன்னெச்சரிக்கை குறித்தும் கூறி அவருகிறார்கள். அந்த வகையில் கொல்கத்தா போலீசார் சோதனை சாவடி இடத்தில் தங்களுடைய பணியை செய்து வந்து உள்ளார்கள். காவல் துறையினர் யாரும் வெளியே வரக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதனால் வெளியில் வெளியில் சுற்றும் நபர்கள் அனைவரையும் திருப்பி அனுப்புகிறார்கள். அப்போது சோதனை சாவடி இடத்தில் பெண் ஒருவர் காரை நிறுத்தி இருக்கிறார். அவரிடம் போலீசார் கொரோனா குறித்து கூறி உள்ளார். அதற்கு அந்த பெண் போலீஸ் ஆடையின் மீது எச்சில் துப்பி அவதூறாக பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த விவேகம் படத்தின் தல அஜித்தின் வில்லன் விவேக் ஓபராய் அவர்கள் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, இதை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
காவல் துறை அதிகாரியிடம் இவ்வளவு அவதூறாக ஒரு பெண் நடந்து இருக்க கூடாது. போலீசார் தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருக்கும் தருணத்தில் இப்படி எல்லாம் நடப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய செயல். இந்த பெண் வேலையை செய்ய முயன்ற போலீஸிடம் திமிர்த்தனமாக நடந்துள்ளார். இதை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
காவல்துறையினர் அவர்களுடைய குடும்பத்தையும் மறந்து ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பாக போராடி வருகின்றனர். அவர்கள் தங்களுடைய குடும்பத்தை பற்றி கூட சிந்திக்கவில்லை. அப்படிப்பட்டவர்களை இந்த மாதிரி அவமானப்படுத்தக் கூடாது. அந்த பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஒவ்வொரு காவல்துறை அதிகாரிக்கும் என்னுடைய சல்யூட் என்று கூறியிருந்தார்.
தமிழகத்தில் இதுவரை 26 பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல நாடுகளில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள். இதுவரை இந்த கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.