அஜித்தின் அறிவிப்பை தொடர்ந்து தோனி ‘தல’ பட்டம் குறித்து பேசிய வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்.

0
1178
dhoni
- Advertisement -

தன்னை இனி ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கிரிக்கெட் உலகில் தல என்று அழைக்கப்படும் தோனியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அஜித். இவரது ரசிகர்கள் இவரை எப்போதும் ‘தல’ என்று தான் அழைத்து வருகின்றனர். அஜித் ரசிகர்களை பொறுத்த வரை ‘தல’ என்றால் அது அஜித் மட்டும் தான். அதனால் தோனியை ‘தல’ என்று குறிப்பிட்டு கூறுவதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை.

-விளம்பரம்-

ஒவ்வொரு முறை தோனியை தல என்று அழைக்கும் போதும் அஜித்தின் ரசிகர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதிலும் பிரபலங்கள் யாரவது தோனியை ‘தல’ என்று புகழ்ந்துவிட்டால் அவ்வளவு தான் அவர்களை சமூக வலைதளத்தில் நாறடித்துவிடுவார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்து முடிந்த Ipl போட்டியின் போது தனுஷ் தோனியை ‘தல’ என்று குறிப்பிட்டு ட்விட் போட்டுவிட்டார்.

- Advertisement -

உடனே சும்மா இருப்பார்களா அஜித் ரசிகர்கள் உடனே தனுஷை சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து பல பதிவுகளை போட ஆரம்பித்துவிட்டனர். இதனால் ட்விட்டரில் நன்றிகெட்டஎழும்பன்_தனுஷ் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் அஜித் தனக்கு ‘தல’ என்ற பட்டம் வேண்டாம் என்று அறிவித்து இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக அமைந்து இருக்கிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ இனிவரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ அல்லது பேசும்போதோ எனது இயற்கை பெயரான அஜித்குமார், அஜித், ஏகே என குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டை பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ‘தல’ என்ற பட்டம் குறித்து தோனி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் தோனி ‘”நான் எங்கு சென்றாலும் என்னை ஒருபோதும் என பெயரை வைத்து அழைப்பதில்லை, அவர்கள் எப்போதும் “தல” என்று கத்துவார்கள். நான் அதைக் கேட்கும் தருணத்தில், அவர் CSKவின் ரசிகர் என்பதும், அவர் நிச்சயமாக தெற்கிலிருந்து வந்தவர் என்பதை புரிந்துகொள்வேன்.

இது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த டீமிற்கும் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள், எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று தோனி கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ அஜித் தன் ‘தல’ பட்டத்தை உதறி தள்ளியதால் இனி தோனி தான் ஒரே தல என்று கூறி வருகின்றனர்.

Advertisement